இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பள்ளி மாணவர்கள் கலந்துரையாடும் நிகழ்ச்சி வருகிற 20 ந் தேதி (திங்கட்கிழமை) டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாணவர்களை தேர்வு செய்யும் வகையில் கடந்த மாதம் 21 ந் தேதி அகில இந்திய அளவில் கட்டுரை போட்டி நடத்தப்பட்டது. 

இந்த போட்டியில் கலந்து கொண்ட திருப்பூர், திருமுருகன்பூண்டி, அணைபுதூரில் செயல்பட்டு வரும் ஏ.கே ஆர் அகாடமி (சி.பி.எஸ்.இ) பள்ளியில் படிக்கும் 9 ம் வகுப்பு மாணவி மஹிமா மற்றும் பதினொன்றாவது படிக்கும் மாணவர் ஹரிஹரன் ஆகியோர் வெற்றி பெற்று தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடும் அரிய வாய்ப்பை பெற்றுள்ள ஏ.கே.ஆர் அகாடமி பள்ளி மாணவர்களை பள்ளி நிறுவனர் குப்புசாமி, தாளாளர் லட்சுமி நாராயணன், நிர்வாக அதிகாரி சுப்பிரமணியம், பள்ளி முதல்வர் மணிமலர் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினார்கள்.
Tags:
மாவட்ட செய்திகள்