குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி விருத்தாசலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி விருத்தாசலம் இஸ்லாமியா  ஐக்கிய ஜமா அத் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 


 

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ஜங்சன் சாலையில் உள்ள மசூதி வாளாகம் முன்பு இஸ்லாமியர்கள்  மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு உஸ்மான் அலி மண்பஈ விருதை ஜமாத்துல் உலமா சபை செயலாளர் தலைமை தாங்கினார். நகர செயலாளர் காதர் ஷரிப், ஊடகப்பிரிவு செயலாளர் லியாக்கத் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தமுமுக மாவட்ட செயலாளர் ஜாகீர்உசேன் பங்கேற்று. குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். நாட்டில் இஸ்லாமியர்களுக்கு சாதகமாக சூழ்நிலைகள் ஏற்படவும் வரும் 16-1- 2020  அன்று ஆண் பெண் இருபாலரும் நோன்பு இருந்து விக்கிரகதுவம்  நடத்திடவும் அன்றே இப்தார் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

 

மத்திய மாநில அரசுகளை எதிர்த்தும் நாட்டில் இஸ்லாமியர்களுக்கு சாதகமான சூழ்நிலை அமையவும் அனைத்து இஸ்லாமியர்களும் நோன்பிருந்து பிரார்த்தனை செய்ய வேண்டும் எனவும்  சி ஏ ஏ ,என் ஆர் சி, என்பிஆர் ஆகியவைகளால் முஸ்லிம்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி தினந்தோறும் பள்ளிவாசலில் தொழுகைக்குப்பின் அறிவு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தவும். மத்திய பிஜேபி அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு அளித்த அதிமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகளை சார்ந்த இஸ்லாமியர்கள் யாரேனும் பள்ளிவாசல் நிர்வாகத்தில் இருந்தாள் அவராகவே அந்த நிர்வாகத்தை விட்டு வெளியேறவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் போன் சிட்டி சம்சுதீன் பிலாட் சம்சு சாகுல் ஹமீது ஆசாத் இலியாஸ் ஜியாவுதீன் மற்றும் ஜங்ஷன் பள்ளி நிர்வாகிகள் ஜமாத்தார்கள் இளைஞர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.




Previous Post Next Post