இதில், 700 காளைகள் 920 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில், சுகாதாரத்துறை அமைச்சரின் 3 காளைகளும் பங்கேற்றுள்ளன.

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம், மதுரை மாவட்ட கலெக்டர் வினய், மாநகர காவல் ஆணையர் டேவிட்சர் தேவ ஆசிர்வாதம், மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன் ஆகியோர் கொண்ட ஜல்லிக்கட்டு கமிட்டி முன்பு இப்போட்டி நடைபெற்று வருகிறது.

 

இந்த ஜல்லிக்கட்டில் தமிழகம் முழுவதும் இருந்து காளைகளும், காளையர்களும் பங்கேற்று அசத்தி வருகின்றனர். காலையிலேயே வாடிவாசலில் அதகளம் செய்த காளைகளை கண்டு பொதுமக்கள் விண்ணதிர கோஷமிட்டு ஆரவாரம் செய்தனர்.

 

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு என்பதால தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் பார்வையாளர்களாக வந்து குவிந்து வருகிறார்கள்.

 

ஜல்லிக்கட்டு களத்தில் தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும

 செய்யப்பட்டு உள்ளது.