தஞ்சை பெரியகோவிலுக்கு தமிழில் கும்பாபிஷேகம் நடப்பது உறுதியாகிறது!!

தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. தஞ்சை பெரிய கோவில் என்றும் பெருவுடையார் கோவில் என்றும் அழைக்கப்படுகின்ற இந்த கோவிலின் கட்டுமானம் காண்போரை வியக்க வைக்க கூடியது.


தமிழர் வாழ்வியலுக்கு சான்றாக இன்றும் இந்த கோவில் கம்பீரமாக நிற்கின்றது. 


உலக பிரசித்தி பெற்ற இந்த கோயிலுக்கு பிப்ரவரி 5ம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது  தமிழில் குடமுழுக்கு செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டுள்ளது. 


இந்த நிலையில் இந்த வழக்குகள் நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது, இந்த விசாரணையில் தமிழக அரசு தரப்பில், தமிழ், சமஸ்கிருதம் ஆகிய 2 மொழிகளிலும் குடமுழுக்கு மற்றும் முக்கிய பூஜைகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டன.


இதை அபிடவிட் ஆக தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு நாளை (29.1.2020) மீண்டும் விசாரணைக்கு வருகிறது. 


தமிழக அரசு அபிடவிட்  தாக்கல் செய்ய தயார் ஆகி உள்ள நிலையில் தஞ்சை பெருவுடையார் கோவிலுக்கு தமிழ் மற்றும் சம்ஸ்கிருத மொழிகளில் கும்பாபிஷேகம் நடைபெறுவது உறுதியாகி விடும். என்று சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 


 


 


Previous Post Next Post