நெல்லை கோடகநல்லூரில் நடைபெற்ற யோக் மாரத்தான் போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் பாரத் முதலிடம் பெற்றார் .
நெல்லை கோடகநல்லூரில் யோக் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள்; திரளானோர் கலந்து கொண்டனர். இப்போட்டிகளை ஐ.பி.எஸ்.அதிகாரி பிரதீப், டிஎஸ்பி சுபாஷினி ஆகியோர் துவக்கி வைத்தனர். 5 கி.மீ., தூர மாரத்தான் போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் பாரத் முதலிடம் பெற்றார் . இவருக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
முதலிடம் பெற்ற மாணவர் பாரத்தை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, இயக்குநர் மிராக்ளின் பால்சுசி, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிரிவாக அலுவலர் கணேசன், உடற்பயிற்சி ஆசிரியர் செல்வன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் உட்பட பலர்பாராட்டினர்.