போகி பண்டிகைக்கு பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து துப்புரவு பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்!

போகி பண்டிகைக்கு பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து துப்புரவு பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் அறிவுரை!

 


 

போகி பண்டிகையையொட்டி ஈரோடு மாநகராட்சியில், பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து, காற்றின் தரத்தைப் பாதுகாத்து புகையில்லா போகி கொண்டாடும் வகையில், பழைய பொருட்டகளை துப்புரவு பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கமிஷனர் இளங்கோவன் தெரிவித்தார். ஈரோடு மாநகராட்சியை குப்பை இல்லாத மாநகராட்சிக்காக மாற்றும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் பண்டிகை சீஸன் நேரத்தில் குப்பையின் அளவு அதிகரித்து விடுகிறது. போகி பண்டிகையொட்டி பழைய பொருட்களை எரிப்பதால் காற்றின்  தரம் பாதிக்கப்படுகிறது. எனவே, பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து துப்புரவு பணியாளர்களிடம் ஒப்படைக்க மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் தெரிவித்ததாவது:

 

நமது முன்னோர்கள், பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த

தேவையில்லா பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையைக் கொண்டாடி வந்துள்ளனர். ஆனால், தற்போது போகி பண்டிகையில் பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவை எரிக்கப்படுகின்றன. இதனால், காற்று மாசு ஏற்படுவதோடு, வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்றவைகளும் ஏற்பட்டு பொது மக்களுக்கு பாதிப்பும் ஏற்படுகிறது. மேலும், வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் எற்படுவதோடு, விபத்துக்களும் ஏற்பட காரணமாக உள்ளது.

 

எனவே, போகிப்பண்டிகையின்போது, பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து, காற்றின் தரத்தை பாதுகாத்து, புகையில்லா போகிப் பண்டிகை கொண்டாடும் வகையில், கழிவுகளை எரிப்பதை தவிர்த்து, மாநகராட்சி பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். பொது மக்கள் ஒத்துழைப்பு கொடுத்து  புகையில்லாத போகி பண்டிகை கொண்டாட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.




Previous Post Next Post