அரசுப் பள்ளியில் தொகுப்பூதியத்தில் கணினி பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாவட்ட கலெக்டர் சி.அ.ராமன் தகவல்.
சேலம் செவித்திறன் மற்றும் பார்வைத்திறன் குறையுடையோருக்கான மாணவர்களில் கற்றல் திறனை மேம்படுத்த புதியதாக அமைக்கப்பட்டுள்ள கணினி ஆய்வகத்தில் பணிபுரிய கணினி பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் செவித்திறன் குறையுடையோருக்கான உயர்நிலை பள்ளி புதியதாக அமைக்கப்பட்டுள்ள கணினி ஆய்வகத்தில் பணிபுரிய இரண்டு கணினி பயிற்றுநர் பணியிடம் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான தேர்வுக்குழுவுடன் கூடி தகுதியான பணியாளரை தேர்வு செய்து ரூ.15,000/- தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்ய ஆணை பெறப்பட்டுள்ளது.
அரசு விதிகளின்படி இப்பணிக்கு 01.07.2019 அன்று 35 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும். அதிக பட்ச வயது வரம்பு கிடையாது. கல்வித்தகுதிகள் , கல்வித்தகுதியுடன் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும். சேலம் மாவட்டத்தில் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பத்தினை சேலம், ஆட்சியர் அலுவலக வளாகம், அறை எண் 11ல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் என்ற முகவரிக்கு கல்விச்சான்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதி சான்று நகல் மற்றும் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் 27.01.2020க்குள் அளிக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் சி.அ.ராமன், தெரிவித்துள்ளார்.