திருப்பூர்: திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை நீக்கக் கோரி 5000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் நோன்பிருந்து சிறப்பு தொழுகை நடத்தினர்.
CAA, NPR, NCR ஐ நீக்கக்கோரி, திருப்பூர் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் ஐக்கிய சுன்னத் ஜமாஅத் சார்பில் திருப்பூர் பெரிய பள்ளி வாசல் உட்பட 7 பள்ளி வாசல்களில் 5000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் நேற்று மாலை முதல் நோன்பிருந்து சிறப்பு தொழுகை நடத்திட முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் திருப்பூர் பெரிய பள்ளிவாசல், வெங்கடேஸ்வரா நகர் பள்ளிவாசல், மங்கலம் பள்ளிவாசல் உள்பட 7 பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து சிறப்பு தொழுகை நடத்தினர். இதில் சுமார் 5000 இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தி வருகின்றனர். இஸ்லாமிய பெண்கள் சி.ஏ.ஏ., சேவை நீக்கக்கோரி வீடுகளிலேயே நோன்பு பெருநாள் தொழுகையில் ஈடுபட்டனர். ஜமாஅத்துல் உலமா சபை துணை பொதுச்செயலாளர் அப்துல பாகவி கூறுகையில், ' குடியுரிமைச் சட்டத்தை நீக்கக் கோரி இறைவனிடம் முறையிடும் விதமாக, திருப்பூரில் உள்ள ஏழு பள்ளிவாசல்களில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து தொழுகை நடத்தி வருகிறோம். இதன் மூலமாக இந்தச் சட்டம் நீக்கப்படும் என நம்புகிறோம் என்றார்.
இன்று 6 மணிக்கு நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஐக்கிய ஜமாத் சார்பில் ஜக்கரியா, முகமதுரபி, அலாவுதீன், ஆதில் ஜமாத்துல் உலமா சார்பில் செயலாளர் ரியாாஸ், கரிம் இம்தாதி, நாசர்,அப்துல்கலாம் உள்பட பலர் கலந்துு கொண்டனர்.