ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள குமாரபாளையம் ஏவிஎஸ் குழுமத்தின் தி ஏ.வி.எஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 8-வது ஆண்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் பள்ளி முதல்வர் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில் மனிதனின் அறிவைப் பெருக்குவதற்கு முக்கியமான பருவம் மாணவப் பருவமே. ஆகவே மாணவர்கள் இந்த வயதில் கவனத்துடனும் திறமையுடனும் கல்வி கற்று தனது தனித்திறமையை வெளிக்காட்டவேண்டும். மேலும் இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அனைத்து குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள் கூறி அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.
இவ்விழாவில் பள்ளி மாணவ மாணவிகள் பரதநாட்டியம், பக்திப்பாடல், மற்றும் சினிமா பாடல்கள் என 30-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு அதற்குத் தகுந்தஉடையலங்காரத்துடன் நடனமாடினர். மாணவர்கள் தங்களது தாய் தந்தையிடம் எவ்வாறு அன்பு செலுத்த வேண்டும் என்பதை நாடகமாக மாணவ மாணவிகளுக்கும், சிறப்பு விருந்தினர்களுக்கும், பெற்றோர்களுக்கும், பொதுமக்களுக்கும் நடித்துக் காட்டினர்.
இந்நிகழ்ச்சியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கும், அதேபோல் ஆண்டுவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பல போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
பரிசுகளை ஏவிஎஸ் கல்வி குழுமத்தின் நிறுவனர் சுப்ரமணியம் மற்றும் அவரது மனைவி வேலாயு அம்மாள், ஜெயகுமார்,செந்தில்குமார்,சுமதி ஜெயக்குமார்,தங்கம் செந்தில்குமார்,கவின்குமார்ஜெயக்குமார்,மற்றும் முதல்வர் கே.ராஜசேகர்,ஆகியோர் பரிசுகளை வழங்கி இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள், பெற்றோர்கள், பொதுமக்கள் என 3000-ற்க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு 8-வது ஆண்டு விழாவினை சிறப்பித்தனர்
Tags:
மாவட்ட செய்திகள்