டிக் டாக்கை தடைபண்ணுங்க.. கணவன் டிக் டாக் தோழியுடன் ஓடியதால் பெண் ஆவேசம்!!

மனைவி, குழந்தையை தவிக்க விட்டு டிக்டாக் தோழியுடன் கணவர் ஓட்டம்...!


 


கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த மேலிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர்.கீழிருப்பு கிராமத்தைச் சேர்ந்த சுகன்யாவை 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட ராஜசேகருக்கு பெண் குழந்தை உள்ளத ராஜசேகர் மது அருந்திவிட்டு, மனைவியை அடித்து துன்புறுத்தி வந்தார்; விவகாரம் போலீஸ் வரை சென்று சமாதானமாகினர். டிக்டாக்கில் அதிக ஈர்ப்பு கொண்ட ராஜசேகர், அதில் வீடியோக்களை பதிவு செய்து வெளியிட்டு வந்துள்ளார்.


நாளடைவில், பல பெண்களுடன் டிக்டாக் வீடியோ வெளியிட்ட தனது கணவரின் போக்கு முற்றிலும் மாறியதாக மனைவி சுகன்யா புகார் அளித்துள்ளார்.


கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறிய ராஜசேகர் வீடு திரும்பவில்லை. 


இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கவிநயா என்ற பெண்ணை காணவில்லை என அவரது உறவினர்கள் புதுக்கோட்டை அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.கவிநயாவின் தொலைபேசி அழைப்புகளை ஆய்வு செய்தபோது அவர் அடிக்கடி ராஜசேகருடன் பேசியது தெரியவந்தது.காணாமல் போன கவிநயா மற்றும் ராஜசேகர் ஒன்றாக இணைந்து டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டுள்ளனர்.


இதனை பார்த்த போலீசார் இருவரும் திருமணம் செய்துகொண்டு டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டுள்ளனர் என சுகன்யாவிடம் கூறியுள்ளனர். தனது கணவர் ராஜசேகர் ஏற்கனவே பல பெண்களுடன் தொடர்பில் உள்ளதாகவும், பல பெண்களை ஏமாற்றி சீரழித்து வருவதாகவும் சுகன்யா கடலூர் போலீசில் புகார் அளித்தார்.குடும்பங்களை சீரழிக்கும் டிக் டாக் செயலியை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று கூறிய சுகன்யா, டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் ஆவேசத்தோடு தெரிவித்தார்.


அறந்தாங்கி மற்றும் புதுக்கோட்டை போலீசார் ராஜசேகர் மற்றும் கவிநயாவைத் தேடி வந்தனர்.புதுக்கோட்டை மாவட்டத்ததில் இருவரும் சுற்றித் திரி்ந்தபோது ரோந்து போலீசாரிடம் சிக்கியுள்ளனர்.விசாரணையில், ராஜசேகர் தனக்கு திருமணமானதை மறைத்து விட்டதாகவும் இருவரும் காதலித்ததால் திருமணம் செய்ததாகவும் கவிநயா தெரிவித்துள்ளார்.தையடுத்து கவிநயாவின் பெற்றோர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவர்களுடன் அனுப்பி வைத்தனர். 


சுகன்யா அளித்த புகாரின் பேரில் ராஜசேகர் மீது வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளனர் பண்ருட்டி போலீசார்.மின்னுவதெல்லாம் பொன்னல்ல என இளம்பெண்கள் தெளிவாக இருந்தாலே ராஜசேகர் போன்ற நபர்கள் காதல் வலை வீச மாட்டார்கள் என்கின்றனர் போலீசார்.


Previous Post Next Post