பாதுகாப்பு விலக்கப்பட்டதில் உள்நோக்கம் கிடையாது ஒ.பன்னீர்செல்வம் பேட்டியில் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரை செல்லும் முன் தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:- மத்திய அரசின் கட்டுபாட்டில் உள்ள உள்துறை அமைச்சகத்தின் முலம் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்தது. எனக்கு பாதுகாப்பு தேவையில்லை என கருதியதால் அது விலக்கப்பட்டு உள்ளது. குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றில் அதிமுகவின் நிலையான உறுதியான நிலைப்பாட்டை சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள சிறுபான்மை மக்களான இஸ்லாமிய, கிறிஸ்துவ மக்களுக்கு எந்தவித ஒரு சிறு இடர்பாடு கூட வராமல் தமிழக அரசு முழு நலனையும் பாதுகாக்கப்படும் என்று சட்டமன்றத்தில் உறுதி அளித்தோம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இருந்து கடைப்பிடிக்கப்படும் நடைமுறை ஆகும். கன்னியாகுமரி சுட்டு கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் அரசு சார்பில் தெரிவித்து கொள்கிறேன்.
அந்த குடும்பத்தினருக்கு உரிய நிவாரண மற்றும் பல்வேறு உதவிகள் செய்யப்படும். எம்.ஜி ஆர். பிறந்தநாள் விழாவில் கொள்கைகளை விளக்க பொதுகூட்டம் நடக்கிறது. எம்.ஜி.ஆர். வழியில் ஜெயலலிதா எந்ற்படுத்திய ஆட்சி சிறப்பாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது. ஆட்சியின் சாதனைகள் குறித்து மக்களுக்கு விளக்கி கூறப்படும். பாதுகாப்பு விலக்கப்பட்டதற்கு எந்தவித உள்நோக்கமும் இல்லை. பாதுகாப்பு தேவையில்லை என்று நினைத்தால் விலக்கப்பட்டு உள்ளது. இந்தியாவிலேயே சட்டம்-ஒழுங்கை காப்பதிலும் நிர்வாக திறமையிலும் தமிழகம் முதல் நிலையில் மாநிலமாக இருப்பதை மத்திய அரசு பிரகடனப்படுத்தி உள்ளது. சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் மாநிலமாக தமிழகம் தொடர்ந்து இருக்கும். ஆங்கிலோ-இந்தியர்களுக்கு தொடர்ந்து பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்பது எங்களுடைய நிலைப்பாடு. இது பற்றி மாநிலங்களவயில் வலியுறுத்தப்பட்டு உள்ளது. இது தொடர்பாக பரிசிலிப்பதாக சம்பந்தப்பட்ட துறை மந்திரி தெரிவித்து உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
Attachments area
Tags:
மாவட்ட செய்திகள்