சிறப்பான நீரிழிவு மேலாண்மையின் முக்கிய அம்சம்

நீரிழிவு மேலாண்மையின் ஒரு முக்கியப் பகுதியாக, இன்சுலின் சிகிச்சை பெரும்பாலான நேரங்களில் திகழ்கிறது.



2 வகை நீரிழிவு நோயாளிகளுக்கு,நோய்காலம் முழுவதும் திறன் வாய்ந்த கிளைசிமிக் கட்டுப்பாட்டிற்கு இன்சுலின் சிகிச்சையானது மிகவும் முக்கியமாகத் தேவைப்படுகிறது மற்றும் இன்ஜெக்ஷன் தொழில்நுட்பம் அச்செயல்முறையின் மிக முக்கியப் பகுதியாகும். பாதுகாப்பான இன்சுலின் ஊசி பயன்பாடுகள் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்த, ஒரு பல்-நகர விழிப்புணாவு பிரச்சார செயல்திட்டமானது, இன்சுலின் இன்ஜெக்ஷன் தினத்தன்று, முன்னணி என்டோகிரைனாலஜிஸ்ட்களுடன் இணைந்து, பிடி-இந்தியாவால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கனடாவின், டொரன்டோ ஜெனரல் ஹாஸ்பிட்டலில், 11 ஜனவரி 1922 அன்று முதல் முறையாக, இன்சுலின் வெற்றிகரமாக வழங்கப்பட்ட நிகழ்வின் 98வது ஆண்டு கொண்டாட்டமாக, இன்சுலின் இன்ஜெக்ஷன் தினம் திகழ்கிறது. கோயம்புத்தூர், கோவை டயபிட்டீஸ் ஸ்பெஷாலிட்டி சென்டர் ரூ ஹாஸ்பிட்டலின், தலைமை நீரிழிவியல் நிபுணர், டாக்டர்.பாலமுருகன் கூறுகையில் பல மக்கள், தவறான இன்சுலின் பயன்பாடு காரணமான ஏற்படத்தக்க பாதிப்புகள் குறித்து முழுமையாக அறியாமல், மீண்டும் மீண்டும் ஒரே இடத்தில்,பயன்பாட்டினை மேற்கொள்கின்றனர்.


தவறாகப் பயன்படுத்தப்படுகையில், லைபோஹைபர்டிரோஃபி என்னும் ஒரு பொதுவான சிக்கலை உண்டாகும். இது சருமத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவது, நோயாளிகளுக்கு சிரமங்களை உருவாக்கலாம். இன்சுலின் இன்ஜெக்ஷன் தினத்தன்று, சரியான கண்டறியப்படாத நிலையில் தவறவிடப்படுவதற்கான வாய்ப்புகளை அதிகம் கொண்டுள்ள, லைபோஹைபெர்டிராஃபி குறித்த விழிப்புணர்வை உண்டாக்கும் பிடி - ன் முயற்சிகள் மிகுந்த ஊக்கமளிப்பதாக உள்ளன” என்று கூறினார்.இத்தகைய விழிப்புணர்வு செயல்திட்டங்களுக்கான தேவை குறித்து வலியுறுத்திப் பேசிய, பிடி -இந்தியா மற்றும் தெற்காசியா மேலாண்மை இயக்குனர், பவன் மோச்செர்லா, கூறுகையில் ,“நீரிழிவு மேலாண்மையின் ஒரு முக்கிய அங்கம் இன்சுலின் சிகிச்சையாகும். பிடி - ல் உள்ள நாங்கள், நீரிழிவுடன் வாழும் நோயாளிகளுக்கான,சரியான இன்சுலின் ஊசி தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டுள்ளோம். 90 ஆண்டுகளுக்கும் மேலாக, நீரிழிவு ஊசி சாதனங்கள் பிரிவில் பிடி தலைமைத்துவ நிலையில் வீற்றிருக்கிறது மற்றும் சிறப்பான வெளிப்பாடுகளுக்காக, இன்சுலின் சிகிச்சையின் சிறந்த வழக்கங்கள் குறித்தப் பேச்சுவார்த்தைகளை ஊக்குவிக்க, இன்சுலின் இன்ஜெக்ஷன் தினம் ஒரு மிகப்பொருத்தமான நேர்வாகும்” என்று கூறினார்.



Previous Post Next Post