6 தலைமுறைக்கு முன்னர் எழுதிய ஓலைச்சுவடிகள் கண்டுபிடிப்பு

 


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மேற்பனைக்காடு  கிராமத்தில் பழங்கால ஓலைச்சுவடிகள் கண்டெடுக்கப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


அறந்தாங்கி அருகே மேற்பனைக்காடு வடக்கு கிராமத்தை சேர்ந்த சின்னையா ஆசாரி மகன் பழனிச்சாமி என்பவரது வீட்டில் சுமார் 6 தலைமுறைகளுக்கு முற்பட்ட பழங்காலத்து ஓலைச்சுவடிகள் இருப்பதாக வந்த தகவலின் பேரில் அறந்தாங்கி வட்டாட்சியர் சூரிய பிரபு தலைமையிலான குழு அந்த ஓலைச்சுவடியை ஆவண
படுத்துவதற்காக சென்றனர். 


அப்பொழுது அவர் வீட்டை சோதனையிட்ட அதன் பேரில் சுமார் 6 தலைமுறைகளுக்கு முற்பட்ட காலகட்டங்களில் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகள் இருந்ததை மீட்டு அறந்தாங்கி வட்டாட்சியர் அலுவலகம் கொண்டு வந்து பின்னர் தொல்லியல் துறையினர் வசம்  ஒப்படைப்பதற்கான ஆயத்தபணிகளை மேற்கொண்டனர். 


அறந்தாங்கி வட்டாட்சியர் சூரிய பிரபு கூறியபோது,  'கண்டெடுக்கப்பட்ட ஓலைச்சுவடிகள் சுமார் 6 தலைமுறையினருக்கு முன்னதாக எழுதப்பட்டது என கணக்கிடப்பட்டுள்ளது. இது தஞ்சை பெரிய கோவில் மற்றும் அரண்மனையில் கட்டுமான பணிகள் பழனிச்சாமி என்பவருடைய மூதாதையர்கள் வேலை பார்த்து வந்ததால், ஓலைச்சுவடிகள் அவர் வீட்டில் இருந்ததாகவும் அது பாதுகாப்பான முறையில் இருந்ததாகவும்  எனக்கு தகவல் தெரிய வந்தது.நமது நாட்டின் செம்மையான பாரம்பரியமான கலாச்சாரம் தொடர்பான ஆய்வுகளுக்கு ஓலைச்சுவடிகள் உள்ளது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் படி தொல்லியல் துறையின் ஆய்வின் மூலமாகவே அந்த ஓலைச் சுவடிகள் எப்போது எழுதப்பட்டது என கணக்கீடபட்டு பின்னர் அரசின் தொல்லியல்
துறையினரால் பாதுகாக்கபடும் என்றார்.ஓலைச்சுவடிகள்


 மேற்பனைக்காடு கிராமத்தில் இருப்பதாக தகவல் வந்ததில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


 


Previous Post Next Post