விருத்தாசலம் காவல் நிலையத்தில் தள்ளுவண்டி சிறு வியாபாரிகள் அழைத்து சாலையோரத்தில் இடையூறு இல்லாமல் வண்டியை தனியாக ஒரு இடத்தில் அமைக்க வேண்டும் என விழிப்புணர்வு நடத்தினர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் காவல் துணைக் கண்காணிப்பாளர் இளங்கோவன் தலைமையில் விருத்தாசலம் கடைவீதி பஸ்டாண்ட் மற்றும் சாலையோரங்களில் தள்ளுவண்டியில் பழக்கடை மற்றும் பூ வியாபாரங்கள் கடை நடத்தி வரும் வியபாரிகளிடம் கடை நடத்தக்கூடாது மற்றும் பேருந்து நிலையத்திலும் கடை வீதிகளிலும் போக்குவரத்துக்கு இடையூறாக நான்கு சக்கரம் தள்ளுவண்டி மூன்று சக்கரம் ஆகிய வண்டிகளில் பூ பழங்கள் விற்றுவரும் வியாபாரிகளை சந்தித்து ஆலோசனை வழங்கினார்.
மேலும் பொது மக்களுக்கும் பேருந்து செல்வதற்கும் இடையூறு இல்லாத இடத்தில் வண்டிகளை நிறுத்தி வியாபாரம் செய்து பயன்பெறுமாறு சிறு பூ வியாபாரிகள் சங்க தலைவர் விஜயகுமார், பொருளாளர் ராஜேஷ், பழக்கடை குமார் ஆகியோர்களிடம் காவல் துணை கண்காணிப்பாளர் அறிவுறுத்தினார். பின்னர் மூன்று மற்றும் நான்கு சக்கர வியாபாரிகள் 50க்கும் மேற்பட்டோர் கடலூர் கலெக்டர் மற்றும் விருத்தாசலம் சப் கலெக்டரிடம் ஒரு மாத கால அவகாசம் கேட்டு வந்தனர். இதில் விருத்தாசலம் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் துணை ஆய்வாளர் புஷ்பராஜ் உடன் இருந்தனர்.
Tags:
செய்திகள்