திருப்பூரில் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காதவரை அடித்து கொன்ற வழக்கில் பத்திரிகையாளர் உட்பட 4 பேர் கைது !!
திருப்பூர் கோல்டன் நகர் பகுதியை சேர்ந்த சுரேஷ் , கடந்த 4 வருடங்களுக்கு முன்பு சுரேஷின் மனைவி திவ்யா உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் தனது ஏழு வயது மகன் சஞ்சய் உடன் சுரேஷ் தங்கி, திருப்பூர் எம்ஜிஆர் காலனியில் உள்ள அப்துல்காதர் என்பவரின் பனியன் கம்பெனியில் பணியாற்றி வந்தார்.
இதனிடையே அந்த நிறுவனத்தில் பணியாற்றும் சாகுல் ஹமீது என்பவரிடமிருந்து அவசரத் தேவைக்காக ஒன்றரை சவரன் தங்க நகை வாங்கியதோடு, அப்பகுதியில் உள்ள நிதி நிறுவனம் நடத்தி வரும் நாகராஜ் என்பவரிடம் இருந்து 10 ஆயிரம் ரூபாயையும் சாகுல் அமீது பெற்ற சுரேஷிடம் கொடுத்துள்ளார்.இந்நிலையில் பணம் மற்றும் நகையை கொடுத்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகியும் சுரேஷ் வாங்கிய பணத்தையும், நகையையும் கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த நாகராஜ், அப்துல் காதர், சாகுல் அமீது, சேட் ருபைதீன் ஆகிய 4 பேரும் கடந்த 1ஆம் தேதியை சுரேஷை் எம்ஜிஆர் காலனி பகுதிக்கு வரவழைத்து நடு ரோட்டில் வைத்து இரும்புக் கம்பி மற்றும் உருட்டு கட்டையை கொண்டு சரமாரியாக அடித்து தப்பி சென்றுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த சுரேஷை அப்பகுதியினர் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சுரேஷ் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். இதனிடையே கொலை குற்றவாளிகள் நான்கு பேரையும வடக்கு போலீசார் தேடி வந்த நிலையில் கடந்த மூன்றாம் தேதி திருப்பூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் வைத்து சாகுல் அமீதை போலீசார் கைது செய்த நிலையில்், கடந்த 10ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நீதிமன்றத்தில் நாகராஜ் மற்றும் அப்துல் காதர் ஆகிய இருவரும் சரணடைந்த நிலையில், திருப்பூர் கூலிபாளையம் பகுதியில் வைத்து சேட் ருபைதீன் என்பவரை போலீசார் இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சேட் ருபைதீனிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ஏற்கனவே திட்டம் தீட்டியபடி சுரேஷை எம்ஜிஆர் காலனி பகுதிக்கு வரவழைத்து அடித்துக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து போலீசார் சேட் ருபைதீனிடமிருந்து பத்திரிக்கையாளர் அடையாள அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டு நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.