திருப்பூரில் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக., சார்பில், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள்
விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் நடந்த இந்த விழாவில் திருப்பூர் மாநகராட்சி முன்புறம் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார், பல்லடம் எம்.எல்.ஏ., கரைப்புதூர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து கழக நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் திருப்பூர் மாநகராட்சியில் இருந்து ஊர்வலமாக வந்து பார்க் ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
அங்கு 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனதன் துவக்கி வைத்தார். பொதுமக்கள் ஆர்வமுடன் அன்னதானம் பெற்று சென்றனர். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் அவைத்தலைவர் பழனிசாமி,வி.எம்.சண்முகம், ஜே.ஆர்.ஜான், ராதாகிருஷ்ணன், தம்பி மனோகரன், ஏ.எஸ்.கண்ணன், எஸ்.பி.என்.பழனிசாமி, அட்லாஸ் லோகநாதன், உஷா ரவிக்குமார், கலைமகள் கோபால்சாமி, பட்டுலிங்கம், சேவூர் வேலுசாமி, காலனி செல்வராஜ், சாகுல் ஹமீது, நீதிராஜன், சரஸ்வதி, அமுதா, ஷாஜகான் உள்பட பலர் பங்கேற்றனர்.
திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக., சார்பில், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழாவையொட்டி திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் திருப்பூர் மாநகராட்சி முன்புறம் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து இனிப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பது. இந்நிகழ்ச்சிக்கு திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார், பல்லடம் எம்.எல்.ஏ., கரைப்புதூர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் அவைத்தலைவர் பழனிசாமி, வி.எம்.சண்முகம், ஜே.ஆர்.ஜான், ராதாகிருஷ்ணன், தம்பி மனோகரன், ஏ.எஸ்.கண்ணன், எஸ்.பி.என்.பழனிசாமி, அட்லாஸ் லோகநாதன், உஷா ரவிக்குமார், கலைமகள் கோபால்சாமி, பட்டுலிங்கம், சேவூர் வேலுசாமி, காலனி செல்வராஜ், சாகுல் ஹமீது, நீதிராஜன், சரஸ்வதி, அமுதா, ஷாஜகான் உள்பட பலர் பங்கேற்றனர்.
Tags:
செய்திகள்