தமிழகத்தில் முதன் முறையாக கோபி நகராட்சியில் காற்றின் மூலம் சாக்கடை சுத்தம் செய்யும் திட்டம் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்.
ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அருகே உள்ள அயலூர் ஊராட்சியில் திமுகவினர் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவின் மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் காந்திவேலு தலைமையில் தமிழக பள்ளிகல்விதுறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலையில் 200க்கும் மேற்பட்டவர்கள் அவரது இல்லத்தில் சந்தித்து அதிமுகவில் இணைந்தனர், இதனை தொடர்ந்து சுப்புநகர் பகுதியில் 5 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்காவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்,பின்னர் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை அழைத்து ஊஞ்சலில் அமரவைத்து ஊஞ்சல் ஆட்டிவிட்டு பின்னர் பொதுமக்களிடையே சிறப்புரையாற்றினார்.
சிறப்புரையில் கோபி நகராட்சி பகுதியில் காற்றின் மூலம் சாக்கடையை சுத்தம் செய்யும் புதிய திட்டம் விரைவில் வருவதாக கூறினார். மரங்கள் அதிகம் நட பள்ளி மாணவர்களுக்கு 6 பாடங்களுக்க 2 மதிப்பெண்கள் வீதம் 12 மதிப்பெண்கள் வழங்க பரிசீலணை செய்து வருவதாகவும்,இதன் மூலம் உரு மாணவன் 2 மரங்கள் வளர்த்து 1 வருடத்திற்க்கு பரமரிப்பதன் மூலம் ஆண்டுக்கு 2 கோடி மரங்களை வளர்க்க முடியும் என்று தெரிவித்தார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பொங்கல் திருநாளில் தமிழக அரசு பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் விளையாட்டை ஊக்கப்படுத்த அம்மா இளைஞர் விளையாட்டு அரங்கம் கட்டித்தர நடவடிக்கை மேற்ளெகாள்ளப்பட்டுள்ளது. கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தில் சில தனியார் பள்ளிகளில் அரசின் இட ஒதுக்கீட்டின் படி மாணவர்கள் சேர்க்கை நடைபெறுவதில்லை என்ற குற்றச்சாட்டிற்கு ஒருசில பள்ளிகளில் அது போல் உள்ளது அரசு விதிகளுக்குட்பட்டுள்ள அனைத்து பள்ளிகளிலும் உரிய நடவடிக்கை எடுக்க அரசு தயாராக உள்ளது. அடுத்தாண்டு என் கவனத்திற்கு யார் வேண்டுமானும் கொண்டு வரலாம் அப்படி கொண்டுவருகின்ற போது அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும். அரசு பள்ளிகளில் காலை உணவு வழங்கப்படும் என வதந்திகளை பரப்பிவருகிறார்கள். காலை உணவு வழங்குவது குறித்து முதல்வர் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
இது சமூக வளைதளங்களில் பரவிவரும் வதந்தியே தவிர வேறென்றும் இல்லை. அரசு பள்ளிகளில் தேர்வுக்காக வசூலிக்கப்படும் தேர்வு கட்டணம் ரத்து செய்யப்படுமா என்ற கேள்விக்கு ஏழை எளிய மாணவர்கள் எங்கு உள்ளார்களோ அங்கு ரத்து செய்ய அரசு பரிசீலனை செய்யும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.நிகழ்ச்சியில் சிட்கோ முனனாள் சேர்மன் சிந்து ரவிச்சந்திரன், ஆவின் தலைவர் காளியப்பன், பிரினியோகணேஸ், நகராட்சி ஆணையாளர் தாணு மூர்த்தி, முன்னாள் சேர்மன் கந்தவேல்முருகன், நகர செயலாளரும், சொசைட்டி தலைவருமான காளியப்பன், முன்னாள் நகராட்சி துணைத் தலைவர் செல்வராஜ், நகர மாணவரணி செயலாளர் கே.செல்வராஜ், லீலாவதி செந்தில்குமார்,முன்னாள் கவுன்சிலர்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Tags:
செய்திகள்