புதுச்சேரி அரசு சார்பில் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி, சேலைக்கான தொகையை பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்த, நிதி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தகவல் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
புதுச்சேரியில் உள்ள ஏழை மக்களுக்கு அரசு சார்பில் பண்டிகை காலங்களில் இலவச வேட்டி, சேலை வழங்கி வருகிறது. இந்நிலை கடந்த தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்த பெரியவர்களுக்கு தலா ரூ -ஆயிரம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பணத்திற்கு பதிலாக பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் சிவப்பு அட்டை குடும்பதாரர்களுக்கு (ஒரு குடும்பத்திற்கு) தலா ரூ-900மும், தனியாக உள்ளவருக்கு ரூ-450ஐ பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பணி செய்தது போன்ற பல்வேறு பணிகள் செய்ததற்காக காவலர்களுக்கு வழங்குவதற்காக ரூபாய் ரூ-22கோடி நிதி வழங்க துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளதாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.