நிர்பயா வழக்கில் 4 பேருக்கும் தூக்கு!! பாட்டியாலா நீதிமன்றம் அதிரடி !!!

 


டெல்லி: நிர்பயா வழக்கில் புதிய தூக்கு தண்டனை தேதியை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் அறிவித்துள்ளது. பிப்ரவரி 1ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


டெல்லியில் பேருந்தில் நிர்பயா கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிர்பயா, சிகிச்சை பலனின்றி டிசம்பர் 29-ஆம் தேதி உயிரிழந்தார்.


இந்த கொலை நாட்டையே உலுக்கியது. இதில் குற்றவாளிகள் நால்வரும் தூக்கு கயிறை எதிர்நோக்கி இருக்கிறார்கள். அக்சய் குமார் சிங், வினய் குமார் சர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய 4 குற்றவாளிகளுக்கும் கடந்த 2017-ம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
குற்றவாளிகள் 4 பேரையும் வருகிற 22-ந்தேதி காலை 7 மணிக்கு தூக்கில் போட சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
ஆனால் இதில் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று இரண்டு முறை குற்றவாளிகள் மனு அளித்தனர் .இந்த வழக்கில் இரண்டு பேர் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, நாரிமன், பானுமதி, அசோக் பூஷண் அடங்கிய அமர்வு முன்பு, உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.


இந்த வழக்கில் குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. குற்றவாளிகளை தூக்கில் போடுவதற்கு தடை விதிக்க முடியாது. சீராய்வு மனுவை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.


ஆனால் இன்னொரு பக்கம் தனக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று குற்றவாளி முகேஷ் சிங் தனியாக டெல்லி ஹைகோர்ட்டில் மீண்டும் மனுதாக்கல் செய்தார். அதையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனால், குற்றவாளி முகேஷ் சிங் கடைசி வாய்ப்பாக குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினார். தூக்கு தண்டனை ரத்து செய்ய கோரி, முகேஷ் சிங் கருணை மனு அனுப்பினார். ஆனால் இந்த மனுவை டெல்லி ஆளுநர், குடியரசுத் தலைவர் ஆகியோர் நிராகரித்தனர்.
இவர் கருணை மனு நிராகரிக்கப்பட்டதால், டெல்லி திகார் சிறை நிர்வாகிகள் புதிய தூக்கு தண்டனை தேதியை கேட்டனர். ஏனென்றால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பின் 14 நாட்கள் கழித்துதான் தூக்கு தண்டனையை நிறைவேற்ற முடியும். இதனால் அவர்கள் புது தேதியை கேட்டனர்.
ஆகவே தற்போது நிர்பயா வழக்கில் புதிய தூக்கு தண்டனை தேதியை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் அறிவித்துள்ளது. பிப்ரவரி 1ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது


Previous Post Next Post