பிரபல நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்ட சத்து நிபுணருமான திவ்யா 'அட்சய பாத்திரம்' என்ற அமைப்பை ஏற்படுத்தி ஊட்டச்சத்து குறைவான குழந்தைகளுக்கு சத்து மிக்க, உணவுகளை அளிக்கும் சமூக சேவையை செய்து வருகிறார்.
இந்த திட்டத்தின் மூலம் பல குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஏற்கனவே, தமிழக அரசு பள்ளிகளில், படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மதிய சத்துணவு, அரசு வழங்கி வரும் நிலையில், தற்போது காலையில் ஊட்டசத்து உணவை அளிக்க திவ்யா திட்டமிட்டார்.
இதற்காக அவர் சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை சந்தித்து தனது திட்டம் குறித்து விளக்கினார். திவ்யாவின் இந்த புரட்சிகரமான திட்டத்திற்கு தமிழக அரசு தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
எனவே வரும் கல்வியாண்டு முதல், அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாலையில் ஊட்டச்சத்துள்ள உணவுகள் கொடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.