தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதிதுறை மற்றும் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் இணைந்து நடத்தும் 3ம் சித்த மருத்துவ தின விழா, சித்த மருத்துவ கண்காட்சி நடைபெற்றது.
இவ்விழாவில் கலெக்டர் சந்தீப் நந்தூரி ,கலந்து கொண்டு, சித்த மருத்துவ கண்காட்சியினை திறந்து வைத்து பார்வையிட்டு, 3ம் சித்த மருத்துவ தின விழாவினை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். மேலும், கர்ப்பினி பெண்களுக்கு ஊட்டசத்து பெட்டகத்தினையும் வழங்கினார் . இவ்விழாவில், கலெக்டர் சந்தீப் நந்தூரி, பேசியதாவது: தூத்துக்குடி மாவட்டம், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதிதுறை மற்றும் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் இணைந்து நடத்தும் 3ம் சித்த மருத்துவ தின விழா, சித்த மருத்துவ கண்காட்சி சிறப்பாக நடைபெறுகிறது. அகஸ்தியர் பிறந்த நாள் ஒவ்வொரு வருடமும் சித்த மருத்துவ தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நமது மாவட்டத்தில் 3வது வருடமாக இவ்விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவை முன்னிட்டு சித்த மருத்துவம் தொடர்பாக பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
இக்கண்காட்சியில் பல்வேறு வகையான நோய்களுக்கு, எந்த முறையான சித்த மருந்துகள் மற்றும் உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது இன்று கையேடு வெளியிடப்பட்டுள்ளது. இந்த கையேட்டில் கர்ப்பினி பெண்கள் எந்த வகையான ஊட்டசத்து உள்ள உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. இன்றைய தலைமுறையினர் உபயோகப்படுத்தும் பல்வேறு வகையான அழகு சாதனப் பொருட்கள் எவ்வாறு தயாரிப்பது குறித்தும் மற்றும் மனதிற்கும், உடலுக்கும் ஆரோக்கியம் தரும் உணவு முறைகள், உடற்பயிற்சிகள் குறித்தும் தொpந்து கொள்ளலாம். தூத்துக்குடி மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு மொத்தம் 12 அரசு மருத்துவமனைகள் செயல்பட்டு வருகிறது. இந்த அரசு மருத்துவமனைகளில் சித்த மருத்துவத்திற்கு தனிபிரிவு உள்ளது.
சித்த மருத்துவத்தில் அனைத்து வகையான நோய்களுக்கும் தேவையான மருந்துகள் உள்ளது. சித்த மருத்துவம் உடலையும், மனதையும் வலிமைபடுத்தும். இது நமது பாரம்பாpயமான மருத்துவ முறையாகும். நமது மூதாதையர்கள் வழிவழியாக வந்தது. இது குறித்த விழிப்புணர்வுகள் குறைவாகவே உள்ளது. நமது வீட்டில் உள்ள பொருட்களின் மூலமாக இயற்கை வைத்தியங்கள் உள்ளது. சித்த மருத்துவம் குறித்து பல ஆராய்ச்சி நிலையங்கள் உள்ளது. அரசு நிறுவனமாக டாம்கால் மூலம் பல்வேறு மருந்துகள் தயார் செய்யப்படுகிறது. நமது பாரம்பரிய யோகா கலையை உலகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தியதைப் போல சித்த மருத்துவ முறைகளையும் விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைவரும் தெரிந்து பயன்பெற வேண்டும் என மாவட்ட கலெக்டர் பேசினார்.