ரூ.3 கோடி மதிப்புள்ள 380 கிலோ கஞ்சா பறிமுதல் - ராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி
ராமநாதபுரம்: எஸ்.பி.பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.3 கோடி மதிப்புள்ள 380 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தது சுங்கத்துறை சாக்கு மூட்டையில் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த கும்பல் குறித்து மண்டபம் சுங்கத்துறையினர் விசாரணை ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப் படுவதாக காவல்துறை மற்றும் சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கடற்கரை பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதேபோல் சுங்கத்துறை அதிகாரிகளும் சோதனை நடத்தினர்.
இந்நிலையில், மண்டபம் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், எஸ்.பி.பட்டினம் கடற்கரை பகுதியில் சாக்கு மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 380 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.3 கோடி ஆகும். இலங்கைக்கு கடத்துவதற்காக இந்த கஞ்சாவை, கடத்தல் கும்பல் பதுக்கி வைத்துள்ளது தெரியவந்துள்ளது. கஞ்சாவை பதுக்கி வைத்த கும்பல் குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:
மாவட்ட செய்திகள்