பழனி சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பாக அனைத்து அரசு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
பழனி சார் ஆட்சியர் தலைமையில் வருகின்ற ஜனவரி 17ம் நாள் தமிழகமெங்கும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. அதன் அடிப்படையில் பழனி புறநகர் பகுதிகளான அ.கலையம்புத்தூர் நெய்க்காரப்பட்டி, ஆண்டிபட்டி, வண்டிவாய்க்கால், ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளன. எனவே ஜல்லிக்கட்டு நடத்தும் நிர்வாக குழுக்களை அழைத்து ஜல்லிக்கட்டு போட்டியின் போது அவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றியும் ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தில் பார்வையாளர்களுக்கு செய்யப்பட வேண்டிய வசதிகள் குறித்தும் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை மாட்டை அடக்குபவர்களுக்கு நிர்வாக கமிட்டியின் மூலம் செய்ய வேண்டிய பாதுகாப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது.மேலும் இந்த ஆய்வு கூட்டத்தில் அரசு அறிவுறுத்தலின்படி அரசுத்துறைகலான காவல்துறை, வருவாய்த்துறை, கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர், உதவி செயற் பொறியாளர் மற்றும் கட்டுமானம் துறை, நிலைய அலுவலர் தீயணைப்பு துறை, காவல் ஆய்வாளர்கள் பழனி நகர காவல் நிலையம் மற்றும் நெய்க்காரப்பட்டி புறநகர் காவல் நிலையம், தலைமை மருத்துவர் அரசு மருத்துவமனை பழனி, துணை சுகாதார நிலையம் நெய்க்காரப்பட்டி, துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் பழனி, கிளை மேலாளர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் பழனி ,
செயல் அலுவலர் பேரூராட்சி அலுவலகம் நெய்க்காரப்பட்டி, கிராம நிர்வாக அலுவலர் பெரியகலையமுத்தூர், மற்றும் நெய்க்காரப்பட்டி, ஜல்லிக்கட்டு விழா கமிட்டியினர் நெய்க்காரப்பட்டி, ஆகியோரை அழைத்து சார் ஆட்சியர் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் சார் ஆட்சியர் கூறுகையில் ஜல்லிக்கட்டு போட்டி என்பது தமிழர்களின் வீர மிகுந்த ஒரு விளையாட்டாகும். இந்த விளையாட்டை விளையாடும் போது தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக இளைஞர்கள் விளையாட வேண்டும். காளை மாட்டை அடக்கும் போது தகுந்த பாதுகாப்பு கவசங்கள் அறிந்திருக்க வேண்டும். உயிர் பாதுகாப்பு என்பது மிகவும் அவசியமான ஒன்று மாடு பிடிக்கும் வீரர்கள் வரிசைப்படுத்தி அவர்களின் உடல்நிலையை மருத்துவ ஆய்வு செய்து மாடு பிடி பிடிப்பதற்கு தகுதி உள்ளவரா என்று ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வகைப்படுத்தி வைத்திருக்க வேண்டும். பார்வையாளர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு மேல் நின்று நிகழ்ச்சியை காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யவேண்டும். பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை விழா கமிட்டியினர் செய்து இருக்க வேண்டும். வீரர்கள் காயம் அடையும்போது முதல் உதவிக்காக அவசர ஊர்தி,மருத்துவ வகைகள், மருந்து வகைகள், ஆகியவை தயார் நிலையில் இருக்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை கூறினர்.இந்நிகழ்வில் பழனி சரக காவல் துணை கண்காணிப்பாளர் விவேகானந்தன் வட்டாட்சியர் பழனிச்சாமி தீயணைப்புத்துறை கமலக்கண்ணன் பழனி அரசு தலைமை மருத்துவர் டாக்டர் உதயகுமார் உள்ளிட்ட பல்வேறு அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Tags:
மாவட்ட செய்திகள்