சிவலோகதியாகராஜசுவாமி திருக்கோயிலுக்கு தருமை ஆதின 27 வது குரு மகா சந்நிதானம் வருகை புரிந்து வழிபாடு

நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம் சிவலோகதியாகராஜசுவாமி திருக்கோயிலுக்கு தருமை ஆதின 27 வது குரு மகா சந்நிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் முதன்முறையாக வருகை புரிந்து வழிபாடு செய்தார்.



தருமை ஆதினத்திற்கு சொந்தமான 27 ஆலயங்களிலும் நேரடியாகச் சென்று வழிபாடு செய்து வருகிறார். அதன்படி 17 வதாக ஆச்சாள்புரம் கோயிலுக்கு வருகை. புரிந்து வழிபாடு செய்தார். ஆச்சாள்புரம் சிவலோகதியாகராஜசுவாமி கோயிலில் திருஞானசம்பந்தருக்கு திருமணம் நடைபெற்றதால் நல்லூர் பெருமணம் என்றழைக்கப்படுகிறது. இத்திருத்தலத்திற்கு திருமணம் காண வந்த அனைவரும் மணமக்களுடன் தீயில் கலந்து முக்தியடைந்ததாக வரலாறு கூறுகிறது. இக்கோயிலில் திருநீலகண்டநாயனார், திருமுருகநாயனார்,  திருநீலநக்க நாயனார் மதங்க சூளாமணியில் முக்தியடைந்ததாக கூறப்படுகிறது. சிவலோகதியாகராஜசுவாமி திருவெண்ணீற்றுயம்மை, திருஞானசம்பந்தர், சனி பகவான் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களையும் வழிபாடு செய்தார். முன்னதாக ஆலய நிர்வாகிகள் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் வினோஷாகருணாகரன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் வீரபாண்டியன், சீர்காழி சட்டநாதர் கோயில் காசாளர் செந்தில் மற்றும் ஊர்பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Previous Post Next Post