கொள்ளிடம் ஒன்றியத்தில் உள்ள 23 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு
கொள்ளிடம் ஒன்றியத்தைச் சேர்ந்த 23 ஒன்றியக்குழு உறுப்பினர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். நாகை மாவட்டம் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், புதியதாக வெற்றி பெற்ற 23 ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கான பதவி ஏற்பு விழா நடைபெற்றது. தேர்தல் அலுவலர் கலைச்செல்வி தலைமை வகித்தார். ஒன்றிய ஆணையர் சரவணன், பி.டி.ஓ இளங்கோவன் மற்றும் அலுவலர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர். புதியதாக பா.ம.க சார்பில் வெற்றி பெற்ற 14 வது வார்டைச் சேர்ந்த மூத்த ஒன்றியக்குழு உறுப்பினர் அன்பழகன் முதன் முதன் முதலில் பதவியேற்றுக் கொண்டார். பின்னர் அவர் முன்னிலையில் 23 ஒன்றியக்குழு உறுப்பினர்களும் பதவியேற்றுக்கொண்டனர். 23 ஒன்றியக்குழு உறுப்பினர்களில் தி.மு.க வைச் சேர்ந்த 12 உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு உறுப்பினரும், அ.தி.மு.க வைச் சேர்ந்த 6 உறுப்பினர்களும், பா.மக வைச் சேர்ந்த 3 உறுப்பினர்களும், ஒரு சுயேச்சை உறுப்பினர்களும் நேற்று பதவியேற்றுக்கொண்டனர். இதில் தி.மு.க மற்றும் கூட்டணி காங்கிரஸ் உறுப்பினரைச் சேர்த்து தி.மு.க வின் பலம் 13 ஆக உள்ளது. எனவே, தி.மு.க சார்பில் ஒன்றியக்குழு தலைவரை தேர்ந்தெடுக்கும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது.