ராஜராஜசோழன் கட்டிய பிரம்மாண்ட தஞ்சை பெரிய கோவிலுக்கு வருகிற பிப்ரவரி 5ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இதையொட்டி, தஞ்சை பெரிய கோவில் சன்னதி கோபுர கலசங்களுக்கு தங்கமுலாம் பூசும் பணி நடைபெற்று வருகிறது.
தஞ்சை பெரிய கோவில் உலக புகழ் பெற்றது இது தமிழர்களின் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது.
இந்த கோவில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நிறைவடைந்துவிட்டது. தமிழகம் மட்டுமின்றி உலகின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் நாள்தோறும் பெரிய கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். இந்தக் கோவிலுக்கு
23 ஆண்டுகளுக்கு பிறகு பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. மத்திய தொல்லியல் துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.பெரியகோயிலில் உள்ள கோபுரங்கள் மற்றும் விமான கோபுரங்கள் இருந்த கலசங்கள் இறக்கப்பட்டு சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது .
சுத்தப்படுத்தும் பணிகள் முடிந்து கோபுர கலசங்களுக்கு தங்கமுலாம் பூசும் பணி நடைபெற்று வருகிறது.
15க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர் இதற்காக வற்றாத ஜீவ நதியில் இருந்து எடுத்துவரப்பட்ட சந்திரகாந்த கல்லைக் கொண்டு சுத்தப்படுத்தப்படுகிறது.இந்தக்
கல்லை வைத்து சுத்தம் செய்தால் கலசங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது அந்த கல்லை கொண்டு சுத்தப்படுத்துவதால் அதன் பொலிவு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
மன்னர் காலத்தில் எந்த முறையில் கலசங்கள் சுத்தம் செய்யப்பட்டதோ அதே முறையில் தற்போதும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஜனவரி மாதம் 25ஆம் தேதி இந்த பணிகள் முடிவடையும். மேலும் பெரிய கோயிலில் இருந்த 33 அடி உயர கொடி மரம் அகற்றப்பட்டு புதிதாக நட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது