பழனி பாதயாத்திரை சென்ற போது பரிதாபம்: கார் மோதி கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி!!



தாராபுரம் அருகே பழனி பாத யாத்திரை சென்ற பக்தர்கள் மீது பொலிரோ கார்  மோதியதில் கல்லூரி மாணவர் உட்பட 2  பேர் பலியாகினர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குட்டைகாடு என்ற இடத்தில் பழனிக்குப் பாதயாத்திரை சென்ற முருக பக்தர்கள் மீது பொலிரோ வாகனம் மோதியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


உடன்சென்ற 2 பேர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர் நடைபெற்ற சம்பவம்  பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.


சேலம்- மற்றும் மொடக்குறிச்சி பகுதியில் இருந்து 30 க்கும் மேற்பட்ட நபர்கள் கொண்ட குழு ஒன்று பழனி மலை முருகன் கோயிலுக்கு பாத யாத்திரையாக செவ்வாய் கிழமை கிளம்பியிருக்கிறது.  


தாராபுரம் அருகேயுள்ள ஊதியூர் பகுதியில் முகாமிட்ட பாத யாத்திரை குழு இரவு தங்கியபின்   இன்று மாலை எழுந்து மீண்டும் பழனி நோக்கிச் சென்றுகொண்டு இருந்தனர்.


தாராபுரம்அருகே குட்டைகாடு என்ற இடம் அருகே வந்தபோது சென்னிமலையில் இருந்து தாராபுரம் பஞ்சப்பட்டியை நோக்கி அசோக்குமார் என்பவர்.  குடும்பத்துடன்  பொலிரோ காரில் சென்று கொண்டு இருந்தார். அவரது கார் பாத யாத்திரை சென்றுகொண்டிருந்த  பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்து  பெரும் விபத்து நேரிட்டது.


இதில் சேலம் மாவட்டம் ஆலங்காட்டு வலசு சேர்ந்த குமார் வயது (46) மற்றும் இவரது அண்ணன் மகன் ஈரோடு மொடக்குறிச்சி , பொன்னம்மாபேட்டையை சேர்ந்த ஜெயபிரகாஷ் வயது (18) (கல்லூரி மாணவர் ). ஆகிய 2பேர் சம்பவ இடத்திலேயே பலத்த காயமடைந்து உயிரிழந்தனர்.


மேலும் மார்ட்டி வயது (50) குருநாதர் வயது(58) என்ற இருவர் படுகாயத்துடன் மிகவும் ஆபத்தான நிலையில் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.


. இந்த விபத்து குறித்து தாராபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்




பழனி பாதயாததிரை சென்ற இருவர் மீது வாகனம் மோதி பலியாகிய சம்பவம் பரிதாபததை ஏற்படுத்தி உள்ளது.


Previous Post Next Post