பழனி தமிழ்நாடு வருவாய்துறை குரூப்-2 நேரடி நியமன அலுவலர்கள் சங்கம் சார்பாக மாநில செயற்குழு கூட்டம்




பழனி தமிழ்நாடு வருவாய்துறை குரூப்-2 நேரடி நியமன அலுவலர்கள் சங்கம் சார்பாக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

 


 

பழனி அடிவாரம் கண்பத் ஹோட்டலில் தமிழ்நாடு வருவாய்த்துறை நேரடி நியமன அலுவலர்கள் சங்கம் சார்பாக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் தலைமையாக மாநிலத் தலைவர்  சையது அபுதாஹிர் முன்னிலையாக வட்டாட்சியர் கற்பகம், மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் சிவா, வரவேற்புரை மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், கூட்டத்தின் சிறப்புரையாக நிறுவனத் தலைவர் இருளப்பன், ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர். மேலும் வருகின்ற எட்டாம் தேதி சில அரசியல் கட்சிகள் சார்பாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள  வேலை நிறுத்த போராட்டத்தில் வருவாய் துறை நேரடி நியமன அலுவலர்கள் சங்கம் கலந்து கொள்ள மாட்டாது என்றும் அன்று வழக்கம் போல் அரசு நிறுவனங்கள் இயங்கும் என்றும் சங்கத்தில் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பணியில் இருப்பார்கள் என்றும் தெரிவித்தனர். மேலும் ஐந்து ஆண்டுகள் பயிற்சி முடித்த நேரடி நியமன உறுப்பினர் களுக்கு துணை வட்டாட்சியர் பதவி உயர்வு அளிக்க வேண்டும்.  அவர்களுக்கு துணை வட்டாட்சியர் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.மேலும் அரசாணை எண் 133 அமல்படுத்தி 2009 ஆம் ஆண்டு முதல் வட்டாட்சியர் துணை வட்டாட்சியர் பட்டியலை அனைத்து மாவட்டங்களிலும் ஜனவரி இறுதிக்குள் வெளியிட வேண்டும் அனைத்து மாவட்டங்களிலும் 2019 ஆம் ஆண்டிற்கான துணை வட்டாட்சியர் பட்டியல் வெளியிடப்படாததால் நிர்வாகப் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக துணை வட்டாட்சியர் பட்டியல் வெளியிட வேண்டும் 2019_20 ஆம் ஆண்டுக்கான காலிபணியிட மதிப்பீடு தவறாக கணக்கிடப் பட்டுள்ளது மேலும் அதனை ரத்து செய்து மூன்றில் ஒரு பங்கினை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உறுதி செய்ய வேண்டும். என்று டிஎன்பிஎஸ்சி தேர்வு ஆணையத்திற்கு அந்த நகலை அனுப்பிட வேண்டும்.உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தீர்மானங்களாக வெளியிட்டுள்ளனர். இந்நிகழ்வில் நன்றியுறையாக மாநிலத் துணைத் தலைவர் வட்டாட்சியர் முத்துசாமி விழாவை நிறைவு செய்தார். இந்நிகழ்வில் பழனி நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் பணிபுரியும் 50க்கும் மேற்பட்ட வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.


 

 



 

Previous Post Next Post