சென்னிமலை முருகன் கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா

சென்னிமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 2020-ம் ஆண்டு தைப்பூச தேர்த்திருவிழா 31-1-2020 தை மாதம் 17-ம் தேதி (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று இரவு 8 மணிக்கு பல்லக்கு சேவை நடைபெறுகிறது.

1-2-2020 (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு மண்டப கட்டளை நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு பல்லக்கு சேவையும் நடைபெறுகிறது.

2-2-2020 (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி, காலை 10 மணி மற்றும் பகல் 2 மணிக்கு மண்டபக்கட்டளை நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு மயில் வாகனக்காட்சியு-ம் நடைபெறுகிறது.

3-2-2020 (திங்கட்கிழமை) காலை 9 மணி, பகல் 11 மணி, பகல் 1 மணி மற்றும் இரவு 8 மணிக்கு மண்டபக்கட்டளை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

4-2-2020 (செவ்வாய்கிழமை) காலை 9 மணி மற்றும் பகல் 11 மணிக்கு மண்டபக்கட்டளை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு பஞ்சமூர்த்தி புறப்பாடு - வெள்ளிமயில் வாகனக்காட்சி நடைபெறுகிறது

5-2-2020 (புதன்கிழமை) காலை 9 மணி, பகல் 1 மணி மற்றும் பகல் 2 மணிக்கு மண்டபக்கட்டளை நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு யானை வாகனக்காட்சியும் நடைபெறுகிறது.

6-2-2020 (வியாழக்கிழமை) பகல் 11 மணிக்கு மேல் மண்டபக்கட்டளை நிகழ்ச்சியும், பகல் 1 மணிக்கு ஸ்ரீமுருகன் மங்கள வார விழாக்குழு கட்டளையும், 1.30 மணிக்கு லாடகுரு அய்யன் தன்னாசியப்பன் வழிபாட்டு மன்றம் மற்றும் ஈரோடு முருகனடியார் கட்டளையும் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு கைலயங்கிரி வாகனக் காட்சியும், இரவு 8 மணிக்கு காமதேனு வாகனக் காட்சியும் நடைபெறுகிறது.

7-2-2020 (வெள்ளிக்கிழமை) காலை 8 மணி, பகல் 2 மணி மற்றும் மாலை 4 மணிக்கு மண்டபக்கட்டளை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.   மாலை 6 மணிக்கு மேல் சென்னிமலை கைலாசநாதர் திருக்கோவிலில் அருள்மிகு வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமார சாமிக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. அன்று இரவு 8 மணிக்கு அருள்மிகு வள்ளி - தெய்வானை சமேத முத்துக்குமார சாமிக்கு வசந்த திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.

8-2-2020 தை மாதம் 25-ம் தேதி (சனிக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு சென்னிமலை கைலாசநாதர் திருக்கோவிலில் அருள்மிகு வள்ளி-தெய்வானை சமேத ஸ்ரீமுத்துக்குமார சாமிக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து காலை 6 மணிக்கு மேல் சாமிகளை சப்பரத்தில் எடுத்து வந்து தேர்நிலைக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு சாமிகள் திருத்தேரை 3 முறை வலம் வந்து திருத்தேரில் அமர வைக்கப்படுகிறது.

பின்னர் தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து காலை 7 மணிக்குள் தெற்கு ராஜ வீதி சந்திப்பில் நிறுத்துகிறார்கள். தேர்த்திருவிழாவை முன்னிட்டு அன்று காலை 8 மணி முதல் சென்னிமலை தேவஸ்தான திருமண மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்று மாலை 5 மணிக்கு மீண்டும் தேர் வடம் பிடிக்கப்பட்டு வடக்கு ராஜ வீதி சந்திப்பில் நிறுத்தப்படுகிறது. அன்று இரவு 9 மணிக்கு சென்னிமலை "கொங்கு வேளாளர் இளைஞர் நற்பணி மன்றம்" சார்பில் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

9-2-2020 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்பட்டு நிலை சேர்க்கப்படுகிறது. அன்று இரவு 9 மணிக்கு நாதஸ்வர தவிலிசை கச்சேரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

10-2-2020 (திங்கட்கிழமை) இரவு 7 மணிக்கு பரிவேட்டை - குதிரை வாகனக்காட்சியும், இரவு 7.30  மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரியும் நடைபெறுகிறது.

இரவு 9.30 மணிக்கு நகைச்சுவை பட்டிமன்றம் நடைபெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடு "தைப்பூச இசை விழாக்குழு"

11-2-2020 (செவ்வாய்கிழமை) காலை 9 மணிக்கு மண்டபக்கட்டளை நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு மார்க்கண்டேய தீர்த்தத்தில் தெப்போற்சவம் - பூத வாகனக் காட்சியும் நடைபெறுகிறது.

இரவு 9 மணிக்கு சென்னிமலை "செங்குந்தர் முதலியார் இளைஞர் நற்பணி மன்றம்" சார்பில் பல்சுவை இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

12-2-2020 தை மாதம் 29-ம் தேதி (புதன்கிழமை) காலை 9 மணிக்கு மேல் பகல் 12 மணிக்குள் சென்னிமலை கைலாசநாதர் திருக்கோவிலில் அருள்மிகு வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமார சாமிக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது.

அன்று இரவு 7 மணிக்கு மகா தரிசனம் நடைபெறுகிறது. 

அப்போது அருள்மிகு நடராஜப் பெருமானும், சுப்பிரமணியசுவாமியும் முறையே வெள்ளி விமானம், வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா காட்சி நடைபெறுகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கிறார்கள்.

அப்போது இரவு 7.30 மணிக்கு "தேவாரத் திருப்புகழ் தேனிசை அமுதகானம்" நிகழ்ச்சியும், இரவு 9.30 மணிக்கு நாதஸ்வர தவிலிசை கச்சேரியும் நடைபெறுகிறது.

13-2-2020  மாசி மாதம் 1-ம் தேதி (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவத்துடன் தேர்த்திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகிறது.

அன்று இரவு 9 மணிக்கு ஸ்ரீவிஸ்வகர்மா சமுதாய விழாக்குழு சார்பில் பல்சுவை கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தேர்த் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

 

 

 

Previous Post Next Post