வேலூரில் ரூ.155.40 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் கட்டிடப் பணிகளை மாவட்ட கலெக்டர்  அ.சண்முகசுந்தரம்,  ஆய்வு

  வேலூர்  மாவட்டம் கே.வி.குப்பம், பேர்ணாம்பட்டு, அணைக்கட்டு ஆகிய வட்டங்களில்  ரூ.155.40 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் கட்டிடப் பணிகளை மாவட்ட கலெக்டர்  அ.சண்முகசுந்தரம்,  ஆய்வு மேற்கொண்டார்
 
வேலூர்  மாவட்டம் கே.வி.குப்பம், வடுகந்தாங்கல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்களுக்கான ரூ.20 இலட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு முடிவுறும் நிலையில் உள்ள மருத்துவ குடியிருப்புகளையும், பேர்ணாம்பட்டு செண்டாத்தூரில் ரூ.25 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் துணை சுகாதார நிலையத்தையும், அணைக்கட்டு வட்டம் மாதனூர்  ஒன்றியம் சின்னப்பள்ளி குப்பத்தில் ரூ.60 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு முடிவுறும் நிலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தையும், காட்பாடி வட்டம் ஆரிமுத்து மோட்டூர்  ஊராட்சியில் 24 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.2.10 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.50.40 இலட்சம் மதிப்பில் முதலமைச்சரின் சூரிய மின்சக்தி உடன் கூடிய பசுமை வீடுகள் கட்டப்பட்டு முடிவடையும் நிலையில் உள்ள வீடுகளையும் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் அ.சண்முகசுந்தரம்,  கட்டிடங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்து பணிகளை விரைவாக முடித்திடுமாறு அலுவலர்களுக்கு உத்திரவிட்டார்கள்.
 


அதற்கு முன்னதாக மாவட்ட கலெக்டர்  ஆரம்ப சுகாதார நிலையம் பிரசவ வார்டிற்கு சென்று கர்ப்பிணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். கர்ப்பிணிகளிடம் சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறதா எனவும், மகப்பேறு நிதி உதவிக்கு விண்ணப்பித்துள்ளீர்களா எனவும், நிதி உதவி கிடைக்கிறதா எனவும் கேட்டறிந்து, தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று சிகிச்கை பிரிவு, வளர்  இளம் பெண்கள் பகுதி, இரத்தப்பரிசோதனை பிரிவு, கண் பரிசோதனை பிரிவு, பல் சிகிச்சை பிரிவு, சித்தா பிரிவு ஆகிய வார்டுகளுக்கு சென்று ஆய்வு செய்தார்.


அதனை அடுத்து ஆரம்ப சுகாதார வளாகத்தில் குடிநீருக்காக போடப்பட்டிருந்த போர்வெல் நீளத்தை அதிகப்படுத்தி குடிநீருக்கு பயன்படுத்திடுமாறு தெரிவித்தார் . பின்னர்  மருத்துவ ஊழியர் களிடம் அடிப்படை வசதிகள் மற்றும் மருந்து, மாத்திரைகள், இருப்பு உள்ளிட்டவைகளை மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.   இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மாலதி, உதவி இயக்குநர்  செந்தில் (ஊராட்சிகள்), உதவி செயற்பொறியாளர்  தேவன் (பொதுபணித்துறை மருத்துவப்பணிகள்), உதவி பொறியாளர்  படவேட்டான், வட்டாட்சியர் முருகன் (பேர்ணாம்பட்டு), வட்டார வளர்ச்சி அலுவலர்  செல்வகுமார்  ஆகியோர்  கலந்து கொண்டனர். 



Previous Post Next Post