தென்காசியில் 108 ல் வரும் நோயாளிகளை உள்ளே அனுமதித்து ஒப்புகை சீட்டு வழங்க மறுப்பு 

தென்காசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் அனுமதித்தால் திட்டித் தீர்ப்பதாகவும் 108 ல் வரும் நோயாளிகளை உள்ளே அனுமதித்து ஒப்புகை சீட்டு கூட வழங்க மறுப்பதாகவும் புகார்




தென்காசி மாவட்டத்தில் தலைமை மருத்துவமனையாக தென்காசி அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது இங்கு சுற்றுவட்டார பகுதியில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. விபத்து எங்கே ஏற்பட்டாலும் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் காயம் பட்டவர்களை இங்குள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு வருவது வழக்கம்.

அவ்வாறு கொண்டு வரும் 108 ஊழியர்களை மருத்துவர்கள் தரக்குறைவாகவும் நோயாளிகளையும் தரக்குறைவாகவும் திட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.. நிலையில் இன்று முத்துகிருஷ்ண பேரி அருகே சாலை விபத்தில் ரவீந்திரம் என்பவர் காயம் பட்டுள்ளார் அவரை 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் 108 ஏற்றிக்கொண்டு வந்து தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் ஆனால் பணியில் இருந்த மருத்துவர் 108 ஊர்களையும் ஊழியர்களையும் காயம் பட்டவர்களின் பார்த்து இங்கு ஏன் கொண்டு வந்தீர்கள் வேறு மருத்துவமனை இல்லையா அங்கு கொண்டு செல்லுங்கள் என்று தரக்குறைவாகவும் திட்டியதாக கூறப்படுகிறது இதே போல் ஆவுடையானூர் பகுதியில் இருந்து வந்த 13 வயது சிறுமியை மருத்துவமணைக்கு கொண்டு வந்த போதும் இதே நிலை நிலவியதாக கூறப்படுகிறது இந்த சம்பவம் 108 ஊழியர்களையும் காயம் பட்டவர்களையும் வேதனைப்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


 

Previous Post Next Post