திருப்பூர் கோவில்வழியில் நடந்த எம்.ஜி.ஆரின் 103வது பிறந்தநாள் விழா

திருப்பூர் கோவில்வழியில் நடந்த எம்.ஜி.ஆரின் 103வது பிறந்தநாள் விழாவில் எம்.எல்.ஏ.,க்கள் கரைப்புதூர் நடராஜன், சு.குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 


 

திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க., பல்லடம் சட்டமன்ற தொகுதி மற்றும் வீரபாண்டி பகுதி அண்ணா தி.மு.க.,சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின்.103வது ஆண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தாராபுரம் ரோடு,  கோவில்வழியில் நடைபெற்றது. 36வது வட்ட செயலாளர் டி.கோகுலகிருஷ்ணன் தலைமை தாங்கி பேசினார். வீரபாண்டி பகுதி செயலாளர் பண்ணையார் வி.பழனிசாமி  வரவேற்றார். கிளை செயலாளர்கள் தர்மலிங்கம், வி.பி.என்.குமார், ராஜேந்திரன், நாகஜோதி, சிவகுமார், ராமமூர்த்தி, கேபிள் சிவா, உள்ளிடவர்கள் முன்னிலை வகித்தனர்.

 


 

சிறப்பு விருந்தினராக பல்லடம் தொகுதி எம்எல்ஏ கரைப்புதூர் நடராஜன் பேசியதாவது:-

தமிழ்நாட்டில் 11 ஆண்டுகள் எம்ஜிஆர் ஆட்சி செய்தார். அவர் ஆட்சியில் இருந்தபோது பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செய்து கொடுத்துள்ளார். ஏழை எளியவர்வர்களுக்கு எண்ணற்ற திட்டங்கள் எம்ஜிஆர் ஆட்சியின் போது தான் கொண்டு வரப்பட்டது. பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி சேலை திட்டத்தை கொண்டு வந்தார் கிராமப்புறங்களில் தன்னிறைவு திட்டம் மூலம் மேல்நிலைத் தொட்டிகள் அதிக அளவில் கட்டப்பட்டது அவர் சம்பாதித்த அனைத்து சொத்துக்களும் தர்மத்திற்கு தானம் செய்தார் அவர் மறைவுக்கு பிறகு ஜெயலலிதா  அடையாளம் கட்டப்பட்டு 1991ம் ஆண்டு முதல்வரானார். சேலம்,  தருமபுரி மாவட்டங்களில் பெண் குழந்தைகள் பிறந்தால் கள்ளிப்பால் கொடுத்து கொல்லும் நிலை இருந்து வந்தது. அந்த பெண் குழந்தைகளை காக்க அரசு தொடடில் குழந்தைகள் திட்டத்தை கொண்டு வந்தார். இன்று 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கு திருமணம் நடந்து, கணவர், குழந்தைகளுடன் வாழ்ந்து வருகின்றனர்.

பள்ளியில்  படிக்கும் குழந்தைகளுக்கு 1ம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரை இலவச நோட்டு புத்தகம், சீருடை, பஸ் பாஸ், சைக்கிள், மடிக்கணினி போன்ற எண்ணற்ற திட்டங்களை வழங்கியுளளார்.பெண்குழந்தைகள் திருமண திட்டம், தாலிக்கு தங்கம் போன்றவைகளும் கொண்டு வந்தார். அவரது ஆட்சியை நடத்தி வரும் முதல்வர்  எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவின் திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார்.

 


 

பல்லடம் தொகுதியில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தொகுதியில்  அதிக வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. 36 மற்றும் 37வது வார்டுகள் மாநகராட்சியில் இணைந்த பிறகு குடி தண்ணீர் பற்றாகுறை இருந்து வந்தது. அதை சரி செய்து 4வது  குடிநீர் திட்டத்தில்   அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மக்கள் என்ன நினைக் கிறார்களோ அதை உணர்ந்து செயல்படும் அரசாக அண்ணா தி.மு.க.அரசு உள்ளது.வரும் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் அண்ணா தி.மு.க.,வேட்பாளரை ஆதரித்து அவரை வெற்றி பெறச் செய்திட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


 

திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,சு.குணசேரன் கலந்து கொண்டு பேசியதாவது:-

உலக அளவில் எந்த ஒரு தலைவரும் இல்லாத தகுதி எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவிற்கு  உள்ளது. தமிழகத்தில் மட்டும் அல்லாமல். உலக அளவிலும் அவரது பிறந்தநாளை கொண்டாடுகிறார்கள். எம்ஜிஆர் ஆட்சியில்தான் மக்களுக்கு நல்ல பல திட்டங்களை  கொண்டு வரப்பட்டது.  கடந்த 2016ம் ஆண்டு தேர்தல் முடிந்ததும், திருப்பூருக்கு ரூ.200 கோடி வடடியில்லா கடனாக வழங்கி திருப்பூரை 2வைத்தார். மக்களுக்கு சேவை செய்யவே ஜெயலலிதா எங்களை (எம்.எல்.ஏ.க்களை)  அனுப்பியுள்ளார்  உங்களுக்காக வேலைக்காரர்களாக இருந்து சேவை செய்ய காத்து இருக்கின்றோம். ஏழை எளிய தொண்டர்கள் கூட அண்ணா தி.மு.கா.வில் எம்.எல்.ஏ.வாக, ,எம்.பி.யாக  அமைச்சர்களாக ஆகலாம் தொண்டர்கள் உள்ள இயக்கம் அண்ணா தி.மு.க.,அனைவரும் பொங்கல் பரிசு வாங்க வேண்டும் என்பதற்காக  சர்க்கரை ரேசன் கார்டுகளை அரிசி கார்டுகளாக மாற்றி கொடுத்தவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அவர் ஜெயலலிதா வழியில் நல்லாட்சி நடத்தி வருகிறார்.  அவருக்கு உங்கள் ஆதரவை தொடர்ந்து அளிக்க வேண்டும். இவவாறு அவர் பேசினார். கூட்டத்தில்  தலைமை கழக பேச்சாளர்கள் சுறு, சுறு சுப்பையா, மாவட்ட துணை செயலாளர் வி.சண்முகம், வழக்கறிஞர் சுப்பிரமணியம், பல்லடம் மார்கெட்டிங் சொசைட்டி தலைவர் சித்துராஜ், பல்லடம் துரை கண்ணன், முத்தனம்பாளையம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பொன்னுசாமி, ராஜசேகர், ஆனந்தன், மணி, சி.டி.சி.பொன்னுசாமி, ரத்தினம், ஹரி, ராதாகிருஷ்ணன், சண்முகம், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.முடிவில் ஆறுமுகவேல் நன்றி கூறினார்.

 


Previous Post Next Post