ரூ.10 கோடி மதிப்பீட்டில் தார்சாலைகள் அமைக்கும் பணி கடம்பூர் செ.ராஜூ தொடங்கி வைத்தார் .

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்குட்ட பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு நகர்புற சாலைகள் உட்கட்டமைப்பு திட்டத்தின் மூலம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் தார்சாலைகள் அமைக்கும் பணிகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்  செ.ராஜூ தொடங்கி வைத்தார் .



தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு
நகர்புற சாலைகள் உட்கட்டமைப்பு திட்டத்தின் மூலம், வள்ளுவர்  நகர், செல்லப்பாண்டியன் தெரு, ஆழ்வார் தெரு, இராமலிங்கம் தெரு, பெருமாள் செட்டி தெரு, பழைய தபால் அலுவலகம் தெரு, தனுஷ்கோடியாபுரம் ஆகிய தெருக்களில் ரூ.2.06 கோடி மதிப்பில் பேவர்  பிளாக் மற்றும் வடிகால் அமைத்தல், வள்ளுவர் நகர், புதுக்கிராமம், முருகன்கோவில் தெரு, பங்களா தெரு ஆகிய பகுதிகளில் ரூ.2.20 கோடி மதிப்பில் பேவர் பிளாக் மற்றும் வடிகால் அமைக்கும் பணி, சங்கரலிங்கபுரத்தில் ரூ.54 இலட்சம் மதிப்பிலும், கதிரேசன் கோவில் ரோடு,  வெங்கடேஷ் நகர், வீரவாஞ்சி நகர்  மற்றும் மாதாங்கோவில் ஆகிய பகுதிகளில்ரூ.2 கோடி மதிப்பில் தார்  சாலை மற்றும் வடிகால் அமைக்கும் பணிகள், ஸ்ரீராம் நகர், சாஸ்திரி நகர், போஸ் நகர்,  P.கே நகர், வக்கீல் தெரு மற்றும் பாரதி நகர்  ஆகிய தெருக்களில் ரூ.2.10 கோடி மதிப்பில் தார்  சாலை மற்றும் வடிகால் அமைக்கும் பணிகள்,


போஸ் நகர், இராமையா நகர், லெனின் நகர், முல்லை நகர், எம்.கே.டி. நகர், வக்கர்  தெருவில் ரூ.1.10 கோடி மதிப்பில் பேவர்  பிளாக் மற்றும் வடிகால் அமைத்தல் என மொத்தம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் பணிகளுக்கான துவக்க விழா கலெக்டர் விஷ்ணு சந்திரன், தலைமையில்  நடைபெற்றது. இவ்விழாவில்  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்  கடம்பூர் செ.ராஜூ  பூமி பூஜையில் கலந்து கொண்டு சாலை மேம்பாட்டு பணிகளை தொடங்கி வைத்தார். இவ்விழாவில் விளாத்திக்குளம்
சட்டமன்ற உறுப்பினர்  போ.சின்னப்பன்முன்னிலை வகித்தார் இவ்விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்ததாவது:- மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா 2011ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில்  புரட்சித்தலைவி அம்மா முதலமைச்சாராக பொறுப்பேற்றவுடன்,


கோவில்பட்டியில் 2வது பைப் லைன் திட்டம் அமைப்பதற்கு ரூ.81.82 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, கோவில்பட்டி பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையான குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வழிவகை செய்து சீரான குடிநீர்  வழங்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து, அனைத்து இல்லங்களுக்கும் ரூ.18 கோடி மதிப்பீட்டில் குடிநீர்  இணைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், மாண்புமிகு புரடசித்தலைவி அம்மா  தமிழ்நாடு கிராமப்புறங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படும் வகையில் சாலை விரிவாக்கும் பணிகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து செயல்படுத்தி வந்தார்கள். தொடர்ந்து அம்மா  வழியிலான தமிழக ,அரசு கிராமப்புற கட்டமைப்பு வசதிகளை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. குடிநீர் இணைப்பு பணிகளின் போது ஏற்பட்ட சாலை பழுதினை சீரமைப்பதற்காக முதற்கட்டமாக தமிழ்நாடு நகர்புற சாலைகள் உட்கட்டமைப்பு திட்ட நிதி 2019 - 2020-ன் கீழ் 6 சிப்பங்களாக ரூ.10 கோடி மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது.


இதன் மூலம் விரைவில் பணிகள் முடிவுற்று பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். இப்பணிகள் தொடங்கப்பட்டு தரமான சாலைகள் அமைக்கபடும் என மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்  தெரிவித்தார். இவ்விழாவில் கோவில்பட்டி நகராட்சி ஆணையர்  கோவிந்தராஜன், கோவில்பட்டி வட்டாட்சியர்  மணிகண்டன், தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர்  சத்யா, முக்கிய பிரமுகர்கள் விஜயபாண்டியன், அய்யாதுரை பாண்டியன், ராமசந்திரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர் . 



Previous Post Next Post