அதிரடி ஆஃபரில் விற்பனை செய்த ஆன்லைன் நிறுவனங்களுக்கு ஆப்பு: மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவு

 


ஸ்மார்ட்போன்களுக்கு அளவுக்கு அதிகப்படியான தள்ளுபடி அளிப்பதாக எழுந்துள்ள புகாரில் மத்திய அரசு அமைப்பு,அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள் மீது விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.


ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களான அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் மீது மத்திய அமைப்பான இந்திய போட்டி ஆணையம் இந்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.


 சந்தையில் அதிகப்படியான டிமாண்ட் மற்றும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள் கவர்ச்சிகரமான அறிமுகங்கள், அதிகப்படியான தள்ளுபடிகளை அறிவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.


போட்டி சட்டம் 2002 பிரிவு 26(1)-ன் கீழ் இரண்டு நிறுவனங்கள் மீது விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.


 பல முக்கிய பிராண்டுகள் தங்களது ஸ்மார்ட்போன் வெளியீடுகளை நேரடியாக இந்த இரண்டு ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுள் எதோ ஒன்றுக்கு விற்பனைக்குத் தருகிறது. 


இதனால், பிராண்டுகளுக்கும் இந்த இரண்டு ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கும் இடையே நேரடி தொடர்பு உள்ளதா என்பதை விசாரிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


சட்டத்துக்கு உகந்த நடைமுறை விதிகளை அமேசானும் ஃப்ளிப்கார்டும் மீறி உள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


 கடந்த 2018-ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் அமேசான் நேரடியாக 45 போன்களும் ஃப்ளிப்கார்ட் 67 மொபைல் போன்களையும் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.


 இது இந்திய போட்டி சட்டத்தின் அடிப்படையில் தவறு எனக் கூறப்பட்டுள்ளது.


Previous Post Next Post