சபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனுக்களை விசாரிக்கப் போவதில்லை என்று உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
சபரிமலை தொடர்பான வழக்கில் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு சில விளக்கங்களை கொடுத்துள்ளது.
அதாவது, உச்சநீதிமன்றம் ஏற்கெனவே அளித்த தீர்ப்பில் பரிந்துரைக்கப்பட்ட கேள்விகள் குறித்து மட்டுமே விசாரணை என தெரிவித்துள்ளது.
பெண்கள் கோவில், மசூதி போன்ற வழிபாட்டு தலங்களுக்குள் நுழைவது வழிபாட்டு முறைகளுடன் சேர்ந்த விஷயமா என விசாரிக்க உள்ளதாகவும் விசாரிக்கப்பட வேண்டிய கேள்விகளை தான் விசாரிக்க இருக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்காலாமா என்பது மட்டும் குறித்து விசாரிக்கப்போவதில்லை எனவும் மத விஷயங்களில் பாகுபாடுகள் காட்டலாமா? அதை கடைபிடிக்கலாமா? என்பது குறித்து நுணுக்கமாக கவனிக்க இருக்கிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளது.
சபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனுக்களை விசாரிக்கப் போவதில்லை எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.