இ-கழிவு என்று சொல்லக்கூடிய மின் கழிவுகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள சுப்பையா சென்ரல் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மின் கழிவுகளை அப்படியே பூமிக்குள் தூக்கி போடுவதால் அதில் உள்ள நச்சுத் தன்மை காரணமாக விவசாய நிலம், தண்ணீர் எந்த அளவிற்கு மாசுபடுகிறது என்று மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. அந்த கழிவுகளை எவ்வாறு மாறு சூழ்ச்சியாக பயன்படுத்த முடியுமா, அல்லது அவற்றை என்ன செய்ய வேண்டும் போன்ற விளக்கங்கள் மாணவர்களுக்கு சொல்லப்பட்டது.
இதில் 400 மாணவர்களுக்கு மேல் கலந்துகொண்டு வீட்டில் பயன்படுத்தப் படாமல் உள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் கம்பியூட்டர், மொபைல், மௌஸ், கீபோர்டு, ஸ்பீக்கர் போன்ற பல வகையான பொருட்களை கொண்டு வந்து கொடுத்தனர். இந்த கழிவுகளை திருப்பூர் மாநகர் நல அலுவலர் பூபதி பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் சுகுமாரன் தலைமை தாங்கினார். இதைப்பற்றிய விழிப்புணர்வு தகவல்களை அரசு அங்கீகாரம் பெற்ற சென்னையை சேர்ந்த லீலா ட்ரேடர்ஸ் நிறுவனத்தில் இருந்து வந்தவர்கள் விளக்கினர். இதில் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.