டிசம்பர் 1முதல் இந்தியாவில் பாஸ்ட்டேக் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (National Highways Authority of India – NHAI) அனைத்து வாகனங்களுக்கும் FAST TAG கட்டாயம் என்று அறிவித்தது.
குறிப்பிட்ட நாட்களுக்குள் சேவை முடிக்கப்படாததால், 15 நாட்கள் கூடுதல் கால அவகாசம் வழங்கியது NHAI. இதனால் டிசம்பர் 15ம் தேதி முதல், டோல்கேட்டில் FAST TAG முறையை அறிமுகப்படுத்தியது.
ஆனால், இன்னும் முழுமையாக அனைத்து வாகனங்களுக்கும் வழங்கப்படாததால், ஜனவரி 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இது இன்றுடன் முடிவடைகிறது, இந்நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு திரும்பும் வாகனங்கள்
சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் அட்டை கட்டண முறையை கட்டாயமாக்கி கெடுபிடி செய்வதால், வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நிற்கின்றன. இதனால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிப்படுகின்றனர்.
இந்த கட்டண முறையை கட்டாயமாக்குவதில் தேசிய நெடுஞ்சாலைத் துறை தீவிரம் காட்டி வருகிறது. இருப்பினும், ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் தலா 2 பாதைகளில் பணம் கொடுத்து பயணம் செய்யலாம்.
சில சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் அட்டையை கட்டாயமாக்கி கெடுபிடி செய்வதால், நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இதேபோல், பாஸ்டேக் திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. சில சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் அட்டைகள் இருப்பு இல்லை. கட்டண தொகை பிடித்தம் தொடர்பான விபரங்களுக்கான எஸ்எம்எஸ் தாமதமாக வருகிறது. சில நேரங்களில் எஸ்எம்எஸ் வருவதே இல்லை என வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக வாகன ஓட்டிகள் சிலர் கூறும்போது, “பாஸ்டேக் அட்டையை கட்டாயம் பயன்படுத்த நாளை (15 ஆம் தேதி) வரையில் சலுகைஅளிக்கப்பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலைத் துறை அறிவித்துள்ளது. ஆனால், பெரும்பாலான சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் வாங்கிய பிறகே, பாதைகளில் செல்ல முடியும் என கெடுபடி செய்வதாக பொது மக்கள் புகார் தெரிவித்தனர்.
பல சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் அட்டைகள் தாராளமாக கிடைப்பதில்லை, வங்கிகளை தொடர்பு கொண்டால் fast Tag அட்டைகள் கிடைக்க சுமார் பத்து நாட்களுக்கு மேல் ஆகின்றது, ஆகவே fasttag அட்டைகள் தாராளமாக கிடைக்க நெடுஞ்சாலைத்துறை ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், அதிகமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படும்போது பாஸ்டேக் அட்டை இல்லாத வாகனங்கள் பாஸ்டேக் பாதையில் செல்ல தற்காலிகமாக அனுமதிக்க வேண்டும்’’ என வாகன ஒட்டிகள் கூறினர் .
இதுதொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறும்போது, “நாடுமுழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் (மின்னணு கட்டணம் வசூல்) முறையை படிப்படியாக கட்டாயமாக்கி வருகிறோம். தற்போதுள்ள நிலவரப்படி, மொத்த சுங்கச்சாவடி கட்டண வசூலில் 60 சதவீதம் பாஸ்டேக் முறையில் வரத் தொடங்கியுள்ளது. பாஸ்டேக் அட்டை தொடர்பாக சில இடங்களில் தொழில்நுட்ப புகார்கள் வருவதை கண்டறிந்துள்ளோம். இதற்குவிரைவில் தீர்வு காண சம்பந்தப்பட்ட வங்கிகள் மற்றும் தொழில்நுட்ப பிரிவினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம், இந்தியாவில் உள்ள அனைத்து சுங்க சாவடிகளிலும் Fasttag அட்டைகள் தாராளமாக கிடைக்கின்றது, வாகன ஓட்டிகள் அவற்றை தேவையான ஆவணங்கள் மற்றும் பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்" என்றனர்.
கார்டை பெறுவது எப்படி?
fast Tag கார்டுகள் எல்லா டோல்கேட்களிலும் கிடைக்கும். அது மட்டுமல்லாமல் சில ஏஜென்ஸிகள் மூலமாகவும் அது விற்பனை செய்யப்படுகிறது. ஆன்லைனிலும் இதற்காக விண்ணப்பம் உள்ளது. அதையும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும். https://www.fastag.org/fasttag அல்லது பேன்க்குகளின் இணையதளத்தின் இருந்தும் விண்ணப்படிவத்தை பெறலாம்.
தேவையான ஆவணங்கள்
1. சம்பந்தப்பட்ட காரின் ஆர். சி புக்.
2. கார் உரிமையாளரின் ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
3. உரிமையாளரின் விபரங்கள் கே.ஓய்.சி., படிவமாக நிரப்பப்படவேண்டும்.
4. இருப்பிடச் சான்று மற்றும் அடையாள சான்றிற்காக டிரைவிங் லைசன்ஸ், ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இதில் ஏதேனும் ஒன்றின் நகல்.
ஃபாஸ்டேக் கார்டு பெறுவதால் கிடைக்கும் நன்மைகள்
1. கையில் சில்லறையாக பணம் எடுத்துச் செல்ல வேண்டிய தேவையில்லை.
2. சுங்கச்சாவடிகளில் வாகனத்தை வரிசையில் நிறுத்தத் தேவையில்லை.
3. ஆன்லைன் மூலம் கிரெடிட்- டெபிட் அல்லது நெட் பேங்கிங் ஆகிய ஆப்ஷன்களை கொண்டு ஃபாஸ்டேக்கை ரீசார்ஜ் செய்ய முடியும்.
4. சுங்கச்சாவடிகளை கடந்த பின்பு கழிக்கப்பட்ட பணம் மற்றும் மீதம் உள்ள பணம் குறித்த தகவல் எஸ்.எம்.எஸ். மூலம் உடனடியாக அனுப்பப்படுவதால், பேலன்ஸ் பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.
5. ஃபாஸ்டேக் வாடிக்கையாளர்களுக்கு சுங்கச்சாவடி கட்டணத்தில் 10 சதவீத தள்ளுபடியும் தரப்படுகிறது.
ரீசார்ஜ் செய்யும் முறை
ஃபாஸ்டேக்கை ரீசார்ஜ் செய்வது சுலபம். ரூ.100 முதல் ரூ.1 லட்சம் வரை வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவைப்படும் தொகைக்கு ரீசார்ஜ் செய்துகொள்ள முடியும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, NEFT, RTGS, நெட் பேங்கிங் என பல வழிகளில் ரீசார்ஜ் செய்யலாம். சுங்கச்சாவடிகளிலும் நேரடியாக ஃபாஸ்டேக்கை ரீசார்ஜ் செய்யும் வசதி உள்ளது.
பேலன்ஸ் செக்
ஃபாஸ்டேக் வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேக ஐ.டி. மற்றும் பாஸ்வேர்ட் வழங்கப்படும். அதனை பயன்படுத்தி வெப்சைட் மூலம் தங்களது கார்டில் உள்ள பேலன்ஸை அவர்கள் தெரிந்து கொள்ளலாம். இனி FastTag-ன் அவசியம் இருக்காது எனும் சூழ்நிலையில் சம்பந்தப்பட்ட கார்டை பிளாக் செய்யவும் வசதி உள்ளது.
வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொண்டு அந்த கார்டை பிளாக் செய்து கொள்ளலாம். ஒருவேளை கார்டு தொலைந்து விட்டாலும், அந்த கார்டை பிளாக் செய்து விட்டு, புதிய கார்டு வாங்கிக் கொள்ளலாம். அப்போது பழைய கார்டில் இருந்த பேலன்ஸ் புதிய கார்டிற்கு மாற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
வாகனத்தில் பொருத்துவது எப்படி ?
இந்த முறையில் FAST TAG ஸ்டிக்கர்களை நம்முடைய வாகனத்தின் முன் பக்க விண்டு ஷீல்டில் பொருத்தி கொள்ள வேண்டும்.
வாகனம் டோல்கேட்டைக் கடந்து செல்லும் போது, அங்கு உள்ள சென்சார்கள் இந்த TAG கை ஆட்டோ மெட்டிக்காக கண்டறியும். பயணத்திற்குரிய கட்டணத்தை நம் கணக்கில் இருந்து எடுத்து கொள்ளும். கணக்கில் பணம் தீர்ந்த பிறகு நீங்கள் மீண்டும் ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும்.
டோல்கேட்களில் கட்டணம் செலுத்த நீங்கள் காத்து கொண்டிருக்க தேவையில்லை. இதன் மூலமாக உங்கள் நேரம் மிச்சமாகும். அத்துடன் கட்டணம் செலுத்த காத்து கொண்டிருக்கும் நேரத்தில், உங்கள் வாகனத்தின் எரிபொருள் வீணாவதும் FAST TAG மூலம் தவிர்க்கப்படும். மேலும் நீங்கள் தங்கு தடையின்றி பயணம் செய்து கொண்டே இருக்க முடியும்.
TOLL GATE களில் ஏற்படும் பயங்கரமான போக்குவரத்து நெரிசலை குறைப்பதுடன் வாகனங்களின் தடையற்ற இயக்கத்தையும் FAST TAG உறுதி செய்கிறது. காகித பயன்பாடும் FAST TAG க் குறைக்கிறது. FAST TAG ஸ்டிக்கரை ஸ்கேனரால் READ செய்ய முடியாவிட்டால் ரொக்கமாக கட்டணத்தை செலுத்தப்பட வேண்டுமா என்பதில் நம்மில் பலருக்கும் சந்தேகமே.
வாகனத்தில் ஒட்டப்பட்டிருக்கும் FAST TAG ஸ்டிக்கரை ஸ்கேனரால் READ செய்ய முடியவில்லை எனில் குறிப்பிட்ட அந்த டோல்கேட்டை நீங்கள் இலவசமாகவே கடந்து செல்ல முடியும் என்று விதிமுறையில் கூறப்பட்டுள்ளது.
தகுந்த ஆவணங்கள் மற்றும் FAST TAG உடன் ஒருவர் டோல்கேட்டை கடக்கும் போது ELECTRONIC DEVICE ஆல் ஏற்படும் இயந்திரக் கோளாறுகளால் ஒருவருடைய பயணத்தை தடை செய்யக்கூடாது என்று தேசிய நெடுஞ்சாலைகள் கட்டண (கட்டணம் மற்றும் வசூலை தீர்மானித்தல்) திருத்த விதிகள் 2018 தெளிவாகக் கூறுகிறது.
fast tag செயல்படுவது எப்படி ?
இது ரேடியோ அதிர்வெண் அடையாள தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.
டோல் பிளாசாக்கள் அருகில் 20 முதல் 25 மீட்டருக்குள் வாகனங்கள் வரும்போது அங்கு பொருத்தப்பட்டுள்ள ரேடியோ அதிர்வெண் அடையாள தொழில்நுட்ப சாதனம், வாகன ஃபாஸ்டேக் மூலம் வாகன எண், வங்கிக் கணக்கு ஆகியவற்றை சில நொடிகளில் கிரகித்துக்கொள்ளும். வாகனம் சாவடிக்கு வந்ததும் அனுமதிக்கும். அந்த இடைவெளியில் வாகன நுழைவுக்கான கட்டணம் தானாக வங்கிக் கணக்கில் இருந்து கழிக்கப்படும்.
இதற்காக மேற்கண்ட வங்கிகளில் வாகன எண்ணுடன் வங்கிக் கணக்கு தொடங்கி ஃபாஸ்டேக் பெற வேண்டும். இந்த முறை மூலம் வாகனங்களும் தாமதமில்லாமல் சுலபமாக சுங்கச்சாவடிகளைக் கடக்க முடியும். அதோடு, சுங்கச்சாவடிகளை கடக்கும் வாகனங்களின் எண்ணிக்கையையும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் துல்லியமாக கண்காணிக்க முடியும்.
fast tag பொருத்தப்பட்ட வாகனங்கள் நாடு முழுவதும் தற்போது 21 கோடிக்கும் மேல் ஓடிக் கொண்டிருக்கின்றன. இதில் ஏறத்தாழ 8 லட்சம் வாகனங்கள் ஃபாஸ்டேக் மின்னணு அட்டையுடன் ஓடிக் கொண்டிருக்கின்றன. தற்போது புதிதாக உற்பத்தி செய்யப்படும் வாகனங்கள் ஃபாஸ்டேக் மின்னணு அட்டையுடனேயே தயாரிக்கப்படுகின்றன என்பதால் புதிதாக வாங்கும் வாகனங்களுக்கு fast tag வாங்க தேவையில்லை