குரங்குகள் அட்டகாசத்தால் பொதுமக்கள் அவதி.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுக்கா வேப்பூர் அருகில் உள்ள பாசார் கிராமத்தில் சுமார் 500 குடும்பத்திற்கும் மேல் வசித்து வருகின்றனர். வனப்பகுதியில் இருந்து கிராமத்திற்கு உணவு தேடி வரும் குரங்குகள் வீடுகளில் இருக்கும் ஓடுகளை கழட்டி உள்ளே இறங்கி உணவுகள் மற்றும் காய்கறிகளை சேதப்படுத்துகிறது.
இதனால் வீடுகளை பாதுகாக்க ஒருவர் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டிய நிலை உள்ளது இதனால் அவர்களின் பணி பாதிக்கப்படுகிறது மற்றும் குரங்குகள் குடியிருப்பு ஓடுகள் மீது ஏரி குதிப்பதால் ஓடுகள் உடைந்து மழைநீர் உள்ளே புகும் நிலையும் உள்ளது என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவியர்கள் கடைகளுக்குச் சென்று தின்பண்டம் வாங்கி வரும் நிலையில் அதனை பறிப்பதற்காக மாணவர்களை துரத்தி கடிக்க செல்கின்றது இதனால் மாணவர்கள் அச்ச மடைந்து கீழே விழுந்து அலறியடித்து ஓடுகிறார்கள். எனவே கிராமங்களில் அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடிக்க சம்பந்தப் பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.