குடியுரிமை திருத்த மசோதாவை கண்டித்து  தமிழ்நாடு தவ்ஹுத் ஜமாத் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்




குடியுரிமை திருத்த மசோதாவை கண்டித்து  தமிழ்நாடு தவ்ஹுத் ஜமாத் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம். 

 


 

தூத்துக்குடியில் இன்று மாலை 4 மணியளவில்  VVD சிக்னல் அருகில் தவ்ஹுத் ஜமாத் தலைமையில் குடியுரிமை திருத்த மசோதாவை கண்டித்து  ஆர்ப்பாட்டம் நடை பெற்றது, மாவட்ட செயலாளர் அஸாருதின் மாவட்ட பொருளாளர் நாசர்துணை தலைவர் தமிம் அன்சார்  மருத்துவ அணி செயலாளர் ரஷித் காமில் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . இதில் மாநில பேச்சாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ் கண்டன உரை நிகழ்த்தினார் . 

 


 

அவர் பேசுகையில் "தேசிய குடியுரிமை திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்து நிறைவேற்றியிருப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதாகும் . மத அடிப் படையில் மக்களை பிவைபடுக்கக்கூடாது என அரசியல் சாசனத்தில் உள்ளது இந்த சட்ட திருத்தத்தின் மூலம் நாட்டிற்கு எவ்வித நன்மையும் ஏற்பட போவதில்லை . பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான் , பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து அகதிகளாக வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவதே மசோதாவின் நோக்கம் என மத்திய அரசு சொல்கிறது . அதில் முஸ்லிம்களுக்கும் , இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை மறுக்கப்பட்டிருப்பது எந்த வகையில் நியாயம். முஸ்லிம்களின் உரிமைகளை பறிக்கும் மத்திய அரசின் போக்கு நாட்டை மத ரீதியில் பிளவுபடுத்துவதாகும் . 

 

பொருளாதார வீழ்ச்சியில் இந்தியா சிக்கித் தவிக்கிறது . ஜிஎஸ்டி போன்ற வரிகளால் வணிக நிறுவனங்கள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்யும் அவலம் அதிகரித்திருக்கிறது . பாலியல் கற்பழிப்புகளால் உலக அரங்கில் பெண்கள் வாழ தகுதியற்ற நாடாக இந்தியா திகழ்கிறது . இது போன்ற பிரச்சினைகளில் நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்க வேண்டிய மத்திய அரசு அதை பற்றி சிறிதும் கவலையில்லாமல் மக்களை பிளவுபடுத்தும் சட்டம் இயற்றுவதன் மூலம் ஏழை மக்களின் பிரச்சினைகள் தீர்ந்து விடப்போவதில்லை. நாட்டின் வளத்தை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்ப்பதன் மூலம் , விலைவாசி உயர்வு கட்டுக்கள் இல்லை அரசு நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படுவதே மத்திய அரசின் தற்போதைய சாதனையாக இருக்கிறது.ஹிட்லரின் நடவடிக்கைகளை மத்திய அரசு கைவிட வேண்டும் இவ்வாறு அவர் பேசினார். இறுதியாக துாத்துக்குடி கிளை செயலாளர் இஸ்மாயில் நன்றி கோரினார் இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர் .


 

 



 

Previous Post Next Post