நீரில் மூழ்கியவர்களை காப்பாற்ற நவீன இயந்திரத்தை கண்டுபிடித்த சத்தியமங்கலம் மாணவர்கள்.
ஆறு குளம் ஏரி ஆகிய இடங்களில் மூழ்கி உயிருக்குப் போராடும் நபர்களை காப்பாற்ற நவீன இயந்திரத்தை கண்டுபிடித்த சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். சிறிய வடிவில் உருவாக்கப் பட்டுள்ள இந்த இயந்திரம் 5 கிலோ எடை கொண்டதாகும் நாற்பதாயிரம் ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த இயந்திரம் நீர் புகாதபடி வடிவமைக்கப்பட்டுள்ளது.
முழுக்க முழுக்க பிவிசி குழாய் உருவாக்கப்பட்டுள்ள இந்த இயந்திரத்தில் நீர் ஆதாரம் செலுத்தும் இரண்டு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன இதில் வெப்பநிலை சென்சார் மற்றும் ஜிபிஎஸ் வரி செலுத்துதல் முதலியன உள்ளன இந்த இயந்திரம் 80 கிலோ வரை எடை உள்ளவர்கள் தாங்கும் வலிமை கொண்டது ஆறு குளம் ஏரி கடல் ஆகிய இடங்களில் சிக்கியவர்களை காப்பாற்றுவதற்காக இந்த இயந்திரத்தை பயன்படுத்தலாம் இரண்டு கிலோ மீட்டர் தூரம் வரை சென்று ஐந்து மணிநேரம் காப்பாற்றும் பணியில் ஈடுபடலாம் என இக்கருவியை வடிவமைத்துள்ள மாணவர்கள் மாணவிகள் தெரிவித்தனர் அந்த இயந்திரம் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு நடத்தும் விஸ்வகர்மா விருது 2019 முதல் சுற்றில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி உள்ளது நீரில் மூழ்கியவர்களை காப்பாற்றும் வகையில் நவீன இயந்திரத்தை கண்டுபிடித்த மாணவ மாணவிகள் யுவன்சங்கர் தர்ஷினி சந்தியா ரம்யா இந்திரா மை ஸ்ரீ ஆகியோரை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்