ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு அதிக இடங்களில் வெற்றிபெறும் அமைச்சர் பேச்சு
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றிபெறுவார்கள் என தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் கூறினார்.
திருவண்ணாமலை மாவட்டம் மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து ஆகாரம் விண்ணமங்கலம் தச்சூர் தேவிகாபுரம் காமக்கூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் நடந்த உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் தி.மலை தெற்கு மாவட்ட கழக செயலாளரும் அமைச்சருமான சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசும்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். 30 ஆண்டுகளில் செய்ய வேண்டிய வளர்ச்சி திட்ட பணியை முதல்வர் 3 ஆண்டுகளில் செய்துள்ளார். விண்ணமங்கலம் ராந்தம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 10 கிராமங்களில் விவசாயிகள் பயன்பெற வேண்டுமென்பதற்காக விண்ணமங்கலம் ஆற்றில் ரூ. 7 கோடி செலவில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. தடுப்பணையில் தண்ணீர் தேங்கினால் சுற்றுவட்டாரத்திலுள்ள விவசாய கிணறுகளில் நீர்மட்டம் உயரும் இதனால் விவசாய தொழில் சிறப்பாக நடக்கும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடக்கிறது உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் மாவட்ட கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பெற்றால்தான் மக்களுக்கு நலத்திட்டங்கள் உடனுக்குடன் வீடு தேடிவரும். தேர்தல் முடிந்தவுடன் பொங்கல் பரிசு உடனடியாக வழங்கப்படும் ஆரணி சட்டமன்ற தொகுதியில் சாலை பணி சிமெண்ட் சாலை கால்வாய் மேம்பாலம் குடிமராமத்து பணிகள் என பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்றுவருகிறது. எனவே வாக்காளர்கள் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட இரட்டை இலை, மாம்பழம் உள்ளிட்ட சின்னத்துக்கு ஓட்டுபோட வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றிபெறுவார்கள் என்றார். இந்த பிரச்சாரத்தில் அதிமுக செய்தி தொடர்பாளர் பாபு முருகவேல், மேற்கு ஆரணி ஒன்றிய செயலாளர் அரையாளம் வேலு அரசு வழக்கறிஞர் சங்கர் உள்ளிட்ட அதிமுக, பாமக, தேமுதிக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.