வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு
மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது கலெக்டர் சி.கதிரவன் தகவல்.
ஈரோடு மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதற்கட்டமாக ஈரோடு,
மொடக்குறிச்சி, கொடுமுடி, கோபிசெட்டிபாளையம், நம்பியூர், தூக்கநாயக்கன்பாளையம் மற்றும் தாளவாடி ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களை சாh;ந்த 657 வாக்குச்சாவடிகளில் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிவுற்று வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் 7 மையங்களில் வைக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் மையங்களான வாசவி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சித்தோடு,
அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி, மொடக்குறிச்சி,ஸ்ரீ சங்கர வித்யாசலா ஆண்கள்
மேல்நலைப்பள்ளி, கொடுமுடி, கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோபிசெட்டிபாளையம், அரசு உயர்நிலைப்பள்ளி, பங்களாபுதூர்,அரசு உயர்நிலைப்பள்ளி, குருமந்தூர்,அரசுஉயர்நிலைப்பள்ளி, தாளவாடி ஆகிய பகுதிகளில் மூன்றடுக்கு பாதுகாப்புடன் பாதுகாப்பு அறைகளில் பாதுகாப்புடன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பு அறை உள்ள வளாகத்தில் கட்டுப்பாட்டு அறை ஒன்று
அமைக்கப்பட்டு அதற்கு பொறுப்பாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில் அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் .
அவருடன் சேர்ந்து காவல் துறை அலுவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கட்டுப்பாட்டு அறையில் உள்ள அலுவலர்கள்
கண்காணிப்பு கேமிரா மூலம் இக்கண்காணிப்பினை 24×7 முறையில்
மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாக்குப்பெட்டிகள் பாதுகப்பபு அறையின் வெளியே நான்கு திசைகளிலும், மற்றும் வாயிலையும் தொடர் கண்காணிப்பிற்கு
உட்படுத்தப்பட்டுள்ளது.
நாள்தோறும் கட்டுப்பாட்டு அறையில் கண்காணிப்பு பதிவேடு பராமாpக்கப்பட்டு வருகிறது. வாக்குப்பெட்டி பாதுகாப்பு அறை முறை பணியில் ஈடுபடும்
துணை வட்டார வளா;ச்சி அலுவலர் மற்றும் வாக்குப்பெட்டி பாதுகாப்பு அறையின் பாதுகாப்பு பணிக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டு, காவலர் ஆகியோர் கையொப்பமிட்டு குறிப்பினை பதிவு செய்யப்பட்டு வருகிறது.மேலும், வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பு அறை பாதுகாப்பிற்காக தடையில்லா மின்சாரம்வழங்கிட ஜெனரேட்டர் வசதி செய்யப்பட்டுள்ளது .