இரவு நேரங்களில் மருத்துவர்கள் இல்லாததை கண்டித்து பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

மங்களூர் அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களில் மருத்துவர்கள் இல்லாததை கண்டித்து பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

 


 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த புடையூர்  கிராமத்திற்கு கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தாலுகா அடுத்த சின்ன சிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன் வயது 45 என்பவர் அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் புடையூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஒகையூர் கிராமத்தை சேர்ந்த ஐயப்பன் 40 என்பவர் மங்களூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது இளங்கோவன் இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளார். இதில் 5 ஐந்து பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

 


 

உடனே அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு மங்களூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனையில்  பணி நேரம் பொழுது மருத்துவர் கவிதா  இல்லாமல் ஒரு செவிலியர் மட்டுமே இருந்துள்ளார். அவரிடம் மருத்துவர்கள் எங்கே என்று கேட்டுள்ளார்கள் அதற்கு அவர் மருத்துவர் கவிதா மருத்துவ மனைக்கு வந்து கையெழுத்து போட்டு விட்டு சென்று விட்டார் என கூறியுள்ளார். உடனே பொதுமக்கள் மருத்துவமனையில் இருந்த ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என கூறி மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் வேனில் ஏற்ற முயன்றனர். ஆனால் ஆம்புலன்ஸ் ஓட்டுநரும் இல்லை என செவிலியர் தெரிவித்துள்ளார்.

 


 

பின் அடிபட்டவர்களை ஆட்டோ மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள்  பணியின் நேரம் பொழுது மருத்துவர் இல்லாததை கண்டித்து இரவு 7 மணி அளவில் மங்களூர் பேருந்து நிலையத்தில் 2 அரசு பேருந்துகளை மறித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பின் மருத்துவர்  கவிதா ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் அதில் பொதுமக்கள் கேட்கும் கேள்விக்கு முன்னும் பின்னுமாக பதில் கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். அதைத் தொடர்ந்து அங்கு வந்த மருத்துவரின் கார் ஓட்டுநர் சுப்பிரமணியன் பொது மக்களிடம் தவறாக பேசி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவரைத் தாக்க முயன்றனர். பின்னர் தகவலறிந்து வந்த வேப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் கவிதா தலைமையிலான போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்  அதில் சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதனை ஏற்ற பொது மக்கல் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது மற்றும் பரபரப்பு ஏற்பட்டது.

Previous Post Next Post