முன்னாள் சிறைவாசிகளுக்கு நலதிட்ட உதவிகள் கூடுதல் மாவட்ட நீதிபதி எஸ்.குணசேகரன் வழங்கினார்.
ஆப்காவின் பயிற்சி பெறும் சிறைஅலுவலர்கள் பயிற்சி பெற்றனர்.
தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் வேலூர் மாவட்டகிளை சார்பில் நலதிட்ட உதவிகளை கூடுதல் மாவட்ட நீதிபதி (விரைவு நீதிமன்றம்) எஸ்.குணசேகரன் வழங்கினார். மற்றும் சிறைத்துறை அலுவலர்களுக்கான பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வரும் சிறத்துறை அலுவலர்கள் வருகை தந்து சங்கத்தின் செயல்பாடுகளை அறிந்தனர் மேலும் முதலுதவி பயிற்சியும் பெற்றனர்.
இவ் விழா மாவட்ட அலுவலகத்தில் 21.12.2019 சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் காவலர் திருமண மண்டபம் அருகில் அமைந்துள்ள தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்க (TAMILNADU DISCHARGED PRISONERS AID SOCIETY-DPAS) அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்விற்கு சங்கத்தின் துணைத்தலைவரும் மூத்த வழக்கறிஞரும், ஆப்காவின் கௌரவ விரிவுரையாளருமான டி.எம்.விஜயராகவலு தலைமை தாங்கினார். முன்னதாக செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் வரவேற்று பேசினார்.
கூடுதல் மாவட்ட நீதிபதி (விரைவு நீதிமன்றம்) எஸ்.குணசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விடுதலையான முன்னாள் சிறைவாசிகள் 4 பேருக்கு தலா ரூபாய் இருபத்தி ஐந்தாயிரம் வீதம் ஒரு இலட்சம் மதிப்பில் நலதிட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது.. விடுதலையான சிறைவாசிகள் திருந்தி வாழனும், முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் சார்பில் வழங்கப்படும் உதவிகளை முறையாகவும் சரியாகவும் பயன்படுத்தி தங்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என்றார். குற்றவாளிகள் சூழ்நிலையில் சிலர் தவறு செய்கிறார்கள், தவறு செய்பவர்கள் இந்திய தண்டனை சட்டத்தின் படி தண்டிக்கப்படுகிறார்கள்.
தண்டனை பெற்றவர்கள் சிறைச்சாலைகளில் நல்லமுறையில் சிறை சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடப்பவர்கள் குறித்து சிறைத்துறையின் ஏழு பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்து தண்டனைகளை குறைக்க அரசுக்கு பரிந்துரைக்கப்படுவர். அவ்வாறு விடுதலை செய்யப்படுபவர்கள் மீண்டும் குற்றம் இழைக்காமல் இருக்கவும் தங்களது வாழ்வாதரத்தினை மேம்படுத்தவும் முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கம் உதவிகளை வழங்குகிறது பாராட்டுதலுக்குரியது என்றார்.
வேலூர் மண்டல சிறைத்துறை துணைத்தலைவர் கே.ஜெயபாரதி, பேசும் போது சிறைத்துறையுடன் இணைந்து பல்வேறு நலத்திட்ட பணிகளை முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கம் செய்து வருவதாகவும், சிறைவாசிகள் பல்வேறு தொழில்களை கற்றுக்கொள்ள சிறையில் வசதிகள் செய்திடவும் சிறைவாசிகள் விடுதலை அடையும் போது அவர்கள் தொடர்ந்து தொழில்கள் மேற்கொள்ளவும் முன்னாள் சிறைவாசிகள் சங்கம் உதவிகளை செய்து வருவது பாராட்டத்தக்கது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த நிகழ்வில் 45பேர் சிறைமீண்டோர் உதவி பெற்றனர் என்றார்.
சிறப்பாக செயலாற்றி வரும் விடுதலையான சிறைவாசிகளுக்காக உழைத்து வரும் துணைத்தலைவர் டி.எம்.விஜயராகவலு, செயலாளர் செ.நா.ஜனார்த்தன்ன், பொருளாளர் ஆர்.சீனிவாசன் ஆகியோருக்கு சால்வை அணிவித்து பாராட்டினார்.இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக சிறைத்துறை அலுவலர்களுக்கான பயிற்சி மையத்தின் (ஆப்கா) (Academy of Prisons &Correctional Administration APCA) இயக்குநர் எம்.சந்திரசேகர், தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் மாநில பொருளாளர் எஸ்.ஞானேஸ்வரன், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.கணேஷ், வேலூர் அரசு குழந்தைகள் பாதுகாப்பு மைய கண்காணிப்பாளர் உமாமகேஸ்வரி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
சிறைத்துறை நன்னடத்தை அலுவலர்கள் (வேலூர்) ஆர்.சரவணன், (திருப்பத்தூர்) சி.பழனி, செயற்குழு உறுப்பினர்கள் எம்.எஸ்.நரசிம்மன், மற்றும் பலர் பங்கேற்று சிறப்பித்தனர். முடிவில் பொருளாளர் குமரன்.ஆர்.சீனிவாசன் நன்றி கூறினார்.
இந்த நிகழ்வில் சிறைத்துறை அலுவலர்களுக்கான பயிற்சி மையத்தில் பயிற்சிகாக வருகை தந்துள்ள தமிழகம், ஆந்திரம், தெலுங்கானா, கர்நாடக மாநில சிறை அலுவலர்கள் 85 பேர் பங்கேற்றனர் அவர்களுக்கு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் செயல்பாடுகளை துணைத்தலைவர் விளக்கி பேசினார். மேலும் அவர்களுக்கு முதலுதவி குறித்து இந்தியன் ரெட்கிராஸ் சங்க முதலுதவி பயிற்சி முகாம் அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனால் பயிற்சி அளிக்கப்பட்டது.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டினை முன்னிட்டு விடுதலையானவர்கள் மற்றும் ஏற்கெனவே விடுதலையானவர்கள் ஆடு, கறவை மாடு வாங்கவும், பெட்டி கடை வைக்கவும், பிழைக்கவும் உதவிடுமாறு வேலூர், திருப்பத்தூர், ஆகிய நன்னடத்தை அலுவலர்களிடம் விண்ணப்பித்துள்ளவர்களின் மனுக்கள் மீதான விசாரனை அறிக்கையினை மண்டல நன்னடத்தை அலுவலரின் பரிந்துரையின் பேரில் அவர்கள் பிழைக்க உதவிடும் வகையில் தலா ரூபாய் இருபத்தி ஐந்தாயிரம் வீதம் ஒரு இலட்சம் நிதிஉதவிகளை காசோலையாக வழங்கப்பட்டது.
1. தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில் வேலூர் மாவட்ட கூடுதல் நீதிபதி எஸ்.குணசேகரன் பேசியபோது எடுத்தப்படம். உடன் இடமிருந்து பொருளாளர் ஆர்.சீனிவாசன், செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.கணேஷ், வேலூர் மண்டல சிறைத்துறை துணைத்தலைவர் கே.ஜெயபாரதி, துணைத்தலைவர் டி.எம்.விஜயராகவலு, ஆப்கா இயக்குநர் எம்.சந்திரசேகர், மாநில பொருளாளர் எஸ்.ஞானசேகரன், கண்காணிப்பாளர் உமாமகேஸ்வரி ஆகியோர்.
2. தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில் விடுதலையான சிறைவாசிக்கு நலத்திட்ட உதவிகளை வேலூர் மாவட்ட கூடுதல் நீதிபதி எஸ்.குணசேகரன் வழங்கியபோது எடுத்தப்படம். உடன் இடமிருந்து பொருளாளர் ஆர்.சீனிவாசன், செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.கணேஷ், வேலூர் மண்டல சிறைத்துறை துணைத்தலைவர் கே.ஜெயபாரதி, துணைத்தலைவர் டி.எம்.விஜயராகவலு, ஆப்கா இயக்குநர் எம்.சந்திரசேகர், மாநில பொருளாளர் எஸ்.ஞானசேகரன், கண்காணிப்பாளர் உமாமகேஸ்வரி ஆகியோர்.
3. தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில் விடுதலையான சிறைவாசிக்கு நலத்திட்ட உதவிகளை வேலூர் மண்டல சிறைத்துறை துணைத்தலைவர் கே.ஜெயபாரதி வழங்கியபோது எடுத்தப்படம். உடன் இடமிருந்து பொருளாளர் ஆர்.சீனிவாசன், செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.கணேஷ், வேலூர் மாவட்ட கூடுதல் நீதிபதி எஸ்.குணசேகரன் துணைத்தலைவர் டி.எம்.விஜயராகவலு, ஆப்கா இயக்குநர் எம்.சந்திரசேகர், மாநில பொருளாளர் எஸ்.ஞானசேகரன், கண்காணிப்பாளர் உமாமகேஸ்வரி ஆகியோர்.
Tags:
மாவட்ட செய்திகள்