பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து கோவிலில் உள்ள சங்கமேஸ்வரர் சன்னதி, வேதநாயகி அம்மன் சன்னதி, ஆதிகேசவ பெருமாள் சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ள கொடி மரங்களில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. அதே வேளையில் கோவிலின் ராஜகோபுரத்தில் உள்ள நான்கு நிலைகளிலும் கார்த்திகை தீபம் ஏற்றி சொக்கப்பனை கொளுத்தப்பட்டுது. இதனைத் தொடர்ந்து பனை ஓலையால் செய்யப்பட்ட சொக்கப்பனையினை கோவில் குருக்கள் கற்பூரம் ஏற்றி சொக்கப்பனை கொளுத்தினார்.
அதன் பின்னர் சங்கமேஸ்வரர் உடனமர் வேதநாயகி அம்மன் ஒரு திருத்தேரிலும் ஆதிகேசவ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி ஒரு தேரிலும் ஏற்றப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தனர் அதனைத் தொடர்ந்து பவானி நகரின் முக்கிய வீதிகளில் சுவாமிகள் திருவீதி உலா நடந்தது இதேபோல் சங்கமேஸ்வரர் கோவில்,. காசி விஸ்வநாதர் கோவில், செல்லியாண்டி அம்மன், ஆகிய கோவில்களிலும் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் அதைத் தொடர்ந்து தங்கள் வீடுகளில் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபட்டனர்.