கே.ஏ.செங்கோட்டையன் திறந்த வேனில் சென்று ஒட்டு சேகரித்தார்.



கே.ஏ.செங்கோட்டையன் திறந்த வேனில் சென்று ஒட்டு சேகரித்தார். வழி நெடுகிலும் ஏராளமான பெண்கள் ஆராத்தி எடுத்து வரவேற்றனர்.

 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அளுக்குளி ஊராட்சி், கோபி பாளையம், பள்ளத்தோட்ட காலணி, காசியூர், கொள்ளுமேட்டுகாலணி,பகுதிகளில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அனுராதாB,SC,ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்குப் போட்டியிடும்  p.இந்துமதி பாண்டுரங்கசாமி B.Com, மற்றும் ஊராட்சி மன்ற குழு உறுப்பினர்கள் ,ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் D. மகாலட்சுமி ஆகியோருக்கு தமிழக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திறந்த வேனில் சென்று ஒட்டு சேகரித்தார்.

 


 

இதில் ஆவின் தலைவர் காளியப்பன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கே.எம்.வெங்கடேஸ்வரன்,ஊராட்சி கழக செயலாளர் பாண்டுரங்கசாமி,  சொசைட்டி தலைவர்கள் கிருஷ்ணசாமி, குறிஞ்சிநாதன்,  நகராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயக்குமார், பெரியசாமி, மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளனர். ஒட்டு சேகரிப்பின் போது அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பொதுமக்களிடம் கூறியதாவது. அடிப்படை வசதிகளான குடிநீர், தெருவிளக்கு, சுகாதாரம், சாலை வசதிக்கு முக்கியதுவம் அளிக்கப்படும் என்றும் இப்போது புதியதாக கட்சி பதவிக்கு அமர்த்தப்பட்டுள்ள ஊராட்சி கழக செயலாளர் பாண்டுரங்கசாமி மிகவும் துடிப்பானவர். கூப்பிட்ட குரலுக்கு ஒடி வந்து உதவக்கூடியவர் எனவே அவரது துணைவியார் இந்துமதி அவர்களுக்கு பூட்டு மற்றும் சாவி சின்னத்திலும், மற்ற வேட்பாளர்களுக்கு அவரவர்கள் நிற்கும் சின்னத்திலும் வாக்கு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார், வழி நெடுகிலும் ஏராளமான பெண்கள் ஆராத்தி எடுத்து வரவேற்றனர்.

 


 

 




 

3 Attachments


Previous Post Next Post