பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மலைமேல் கும்பாபிஷேகத்துக்கான பாலாலய பூஜை

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மலைமேல் கும்பாபிஷேகத்துக்கான பாலாலய பூஜை நடைபெற்றது.



பழனி அடிவாரத்தில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தமிழ் நாட்டின் மிகச்சிறந்த ஆன்மீக தலமாகும். அதுமட்டுமல்லாமல் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக முருகன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இத்திருக்கோயிலுக்கு நாள்தோறும் பல லட்சம் பக்தர்கள் மாலை அணிவித்தும் சுற்றுலா பயணிகளாகவும் வருகை புரிகின்றனர். இந்நிலையில் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்று கடந்த பல மாதங்களாக இந்து அமைப்புகளும் சமூக ஆர்வலர்களும் தமிழக அரசுக்கும் இந்து அறநிலைத் துறையினருக்கும் கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர்.



மேலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோயில் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்ற நிலையில் 12 ஆண்டு முடிந்து 13 ஆம் ஆண்டை நோக்கி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் கோயில் கும்பா பிஷேகம் நடைபெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.  கோயில் செயல் அலுவலர் புதிதாக பொறுப்பேற்றுள்ள நிலையில் கும்பாபிஷேகம் நடக்க இருப்பதால் செயல்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனடிப்படையில் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு இந்து அறநிலைத்துறை பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக் கோயிலுக்கு விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டனர்.  அதற்கான தொகையாக 6.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்தனர்.



கும்பாபிஷேக முதல் பூஜையாக பாலாலய பூஜை இன்று காலை அர்ச்சகர்கள் பல்வேறு மந்திரங்கள் முழங்க இந்து அறநிலை துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி, வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம், கோயில் செயல் அலுவலர் ஜெயச்சந்திர பானு ரெட்டி,உதவி ஆணையர் செந்தில்குமார், மக்கள் தொடர்பு அதிகாரி கருப்பண்ணன், முன்னிலையில் இன்று பாலாலய பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த பூஜையில் கலசங்களுக்கு பால் அபிஷேகம் செய்து கோமாதாவிற்க்கு சால்வை அணிவித்து மரியாதை செய்து திருக்கோயிலை சுற்றி வலம் வந்தனர். பாலாலய பூஜைக்காக யாகசாலை அமைக்கப்பட்டு ஓமகுண்டம் வளர்க்கப்பட்டு கலசங்களுக்கு மாலை அணிவித்து அமைச்சர்கள் முன்னிலையில் அர்ச்சகர்கள் தலையில் வைத்துக் கொண்டு திருக்கோயிலை சுற்றி வலம் வந்தனர். இன்னும் மூன்று மாதங்கள் முடிவடைந்த நிலையில் திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று அமைச்சர்கள் தெரிவித்தனர். அதற்கான ஆயத்தப் பணிகள் கோவில் நிர்வாகமும் அறநிலைத்துறை நிர்வாகமும் விரைவாக செயல்படுத்திக் கொண்டு வருகின்றனர். இந்த நிகழ்வில் நகர செயலாளர் முருகானந்தம்,வீரமணி, செல்வக்குமார்,நகர காவல்துறை ஆய்வாளர் செந்தில்குமார், சார்பு ஆய்வாளர் ரஞ்சித்குமார், உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் திருக்கோயில் அலுவலர்களும் அதிகாரிகளும் பக்தர்களும் பொதுமக்களும் இந்து அமைப்புகளைச் சேர்ந்த கட்சி பிரமுகர்களும் சமூக ஆர்வலர்களும் இந்த பாலாலய பூஜையில் கலந்துகொண்டு முருகன் ஆசி பெற்றனர்.


Previous Post Next Post