பாபர் மசூதி அமைந்துள்ள இடத்தை மீண்டும் இஸ்லாமியர்களுக்கே வழங்க வேண்டும் - எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பழனியில் பாபர் மசூதி இடிப்பை கண்டித்தும் பாபர் மசூதி அமைந்துள்ள இடத்தை மீண்டும் இஸ்லாமியர்களுக்கே வழங்க வேண்டு மென்று எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



பழனி ரவுண்டானா அருகே எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மசூதி இடத்தினை இஸ்லாமியர்களுக்கு கொடுக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறு சீராய்வு செய்து அந்த இடத்தின் முழு அதிகாரத்தையும் இஸ்லாமியர்களுக்கு வழங்க வேண்டும். பாபர் மசூதியை இடித்தவர்களை அடையாளம் கண்டு அவர்களை மீது வழக்குப் பதிவு செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும். பாபர் மசூதியில் ராமர் கோயில் உள்ளது என்று ஒரு பொய்யான தகவல்களை வைத்து பாபர் மசூதி இடிக்கப்பட்டது. எனவே இந்திய அரசு அயோத்தியில் பாபர் மசூதி அமைந்துள்ள இடத்தை முழுமையாக இஸ்லாமியர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இந்திய அரசு அந்த இடத்தில் பாபர் மசூதி மீண்டும் கட்டுவதற்கு நிதி ஒதுக்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் தலைமையாக திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் கைசர், வரவேற்புரையாக மாவட்ட செயலாளர் சதாம் உசேன், முன்னிலையாக முஸ்லிம் தர்ம பரிபாலன சங்கத் துணைத் தலைவர் சதாம் உசேன்,மற்றும் இந்த ஆர்ப்பாட்டத்தின் சிறப்பு பேச்சாளராக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பேச்சாளர் அப்துல் காதர் கண்டன உரையாற்றினார்.  இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராகவும் இஸ்லாமியர்களுக்கு நீதி மறுக்கப்பட்ட தாகவும் பல்வேறு வகையான கோஷங்களை எழுப்பினர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி கொடுக்காததால் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில்  கலந்து கொண்ட அனைவரையும் காவல்துறை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.


Previous Post Next Post