கீதாஜீவன் எம்.எல்.ஏவின் கோரிக்கையை ஏற்று மோட்டார் அமைத்த மாவட்ட, மாநகராட்சி நிர்வாகம்!




கீதாஜீவன் எம்.எல்.ஏவின் கோரிக்கையை ஏற்று மோட்டார் அமைத்த மாவட்ட, மாநகராட்சி நிர்வாகம்!

 


 

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து மழை நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை லூர்தம்மாள்புரம், ராஜீவ் காந்தி நகர், கலைஞர் நகர், சென்மேரிஸ் காலணி ஆகிய பகுதிகளில் மழை நீர் முழுவதுமாக வடிந்து வந்த நிலையில்  அடுத்து பெய்த மழையினால் மேற்கண்ட பகுதிகளுக்கு மீண்டும் மழைநீர் புகுந்து மீண்டும் பழைய நிலைக்கு சென்றது. 

 


 

கடந்த வெள்ளிகிழமை அப்பகுதிகளில் ஆய்வு செய்த  சட்டமன்ற உறுப்பினர் கீதாஜீவன் மாவட்ட ஆட்சியர் அவர்களை தொடர்பு கொண்டு சென் மேரிஸ் காலனி நீர்த்தேக்கத் தொட்டி அருகில் பெரிய வகையிலான திறன் கொண்ட மோட்டார் வைக்குமாறு கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து அப்பகுதிகளுக்கு  மாவட்ட வருவாய் ஆய்வாளர் மற்றும் கோட்டாட்சியர் அவர்களை அப்பகுதிகளுக்கு அனுப்பிவைத்து ஆய்வு செய்தனர். பின்னர் சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று  42 HP திறன் கொண்ட பெரிய வகையிலான மழை நீர் உறிஞ்சும் மோட்டார் வைத்து நீரை எடுக்கும் பணி இன்று  நடைபெற்று வருகிறது. 

 

 


 



 

Previous Post Next Post