பெரங்கியம் ஊராட்சியில் ஒன்பதாவது வார்டு பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைத்தனர்
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ராமநத்தம் ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ளன. இதில் ராமநத்தம் ஊராட்சியின் துணை கிராமமான பெரங்கியம் பகுதியிலுள்ள 9வது வார்டில் 299 வாக்காளர்கள் உள்ளனர் இதில் 290 வாக்காளர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் ஆகும். இது கடந்த தேர்தல் வரை பொது வார்ட் ஆகவே இருந்து வந்தது தற்போது நடந்த வார்டு வரையறையின் போது இது தனி வார்டாக மாற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் மீண்டும் அந்த வார்டை பொதுவார்டாக மாற்றச் சொல்லி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர். அந்த மனுவின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் மங்களூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைத்து தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்தனர்.